சட்ட விரோத மண் கைப்பற்றப்பட்டன; இருவர் கைது!

0
163

(வாழைச்சேனை நிருபர்)

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் சட்ட விரோதமான முறையில் மண் ஏற்றி வந்த இரண்டு வாகனங்களை வெவ்வேறு பிரதேசங்களில் வைத்து இன்று (05) வெள்ளிக்கிழமை கைப்பற்றியுள்ளதுடன் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன

வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் சட்ட விரோத மண் அகழ்வு நடவடிக்கையினை தடுக்கும் வகையில் விஷேட வேலைகளை செய்து வருகின்றனர். அதன் அடிப்படையில் சட்ட விரோத மண்களை வெவ்வேறு இடங்களில் இருந்து ஏற்றி ஓட்டமாவடி பிரதேசத்திற்கு கொண்டு வந்த ஒரு உழவு இயந்திரம் மற்றும் லொறி ஒன்றினையும் இன்று வெள்ளிக்கிழமை காலை கிரான் மற்றும் புலிபாய்ந்தகல் பிரதேசத்தில் வைத்து கைப்பற்றியுள்ளதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் பொண்டுகள்சேனை, வாகனேரி, போன்ற பகுதிகளில் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் அடிப்படையிலயே சட்டவிரோதமான முறையில் மண் ஏற்றி வந்த உழவு இயந்திரம் மற்றும் லொறி என்பன கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அதன் சாரதிகள் இருவரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன மேலும் தெரிவித்தார்.

02

LEAVE A REPLY