மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்வதே எமது முழு நோக்கம்: ஐதேக வேட்பாளர் சறூஜ்

0
248

(ஆக்கில் முஹம்மட்)

மறைந்த தலைவர் அஸ்ரப் மற்றும் பரீட் மீராலெவ்வை போன்றோரின் அரசியலை எடுத்துக்காட்டாக கொண்டு செயற்படும் முன்னாள் முதல்வரின் பாசறையில் வளர்ந்த எங்களை இறைவனின் நாட்டத்தை தவிர்த்து எந்த கட்சிகளாலும் தோற்றகடிக்க முடியாது என்று கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரின் இணைப்புச் செயலாளரும் ஏறாவூர் நகர சபையின் யானைச் சின்னத்தின் 08 ஆம் வட்டார வேட்பாளருமாகிய எஸ்.எம்.சறூஜ் தெரிவித்தார்.

ஏறாவூர் நகர சபையின் 08 ஆம் வட்டார வேட்பாளராகிய எஸ்.எம்.சறூஜ் அப் பகுதி மக்களின் குறைகளை கேட்டறிந்து கொள்ளும் நோக்கில் கடந்த புதன் கிழமை (03.01.2018) இடம் பெற்ற கலந்துரையாடலின் போதே இவர் இவ்வாறு தெரிவித்தார்.

மறைந்த தலைவர் அஸ்ரப் மற்றும் பரீட் மீராலெவ்வை போன்றௌரின் அரசியலை எடுத்துக்காட்டாக கொண்டு செயற்படும் முன்னாள் முதல்வர் சேவைகள் மூலம் கிழக்கின் முடி சூடா மன்னனாக திகழ்ந்த முன்னாள் முதல்வர் என்றும் மக்களின் நலனில் தனது முழுக் கவனத்தினையூம் கொண்டு செயற்பட்டு வந்தார். அவரைப் போன்றே நாங்களும் அவரின் வளர்ப்பில் உருவாகியவர்கள். பொது மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்வதே எமது முழு நோக்கம் என்றும் அவர் இங்கு கருத்துத் தெரிவித்தார்.

முழு நாட்டு மக்களின் மனதை வெற்றி கொண்ட மறைந்த தலைவர் அஸ்ரப் மற்றும் நான் என்றும் மதிப்பளிக்கும் எனது மனதை விட்டு நீங்காத அரசியல்வாதியான மறைந்த அரசியல்வாதி பரீட் மீராலெவ்வை போன்று முழுக் கிழக்கு மாகாணத்தின் மக்களின் மனதையூம் சேவைகள் மூலம் வெற்றி கொண்ட எம் முன்னாள் முதல்வரால் ஏறாவூரை வெற்றி கொள்வது என்பது இலகுவான விடயம் என்றும் அவரைப் போன்றே நாங்களும் உங்களுக்கு சேவை செய்வதற்கான முழு அங்கீகாரத்தினையூம் எங்களுக்கு தந்து உதவூமாறும் அவர் இங்கு குறிப்பிட்டார்.

இந் நிகழ்வில் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அகமட் உட்பட கட்சியின் முக்கியஸ்த்தர்கள் மற்றும் ஏனைய வேட்பாளர்கள் அடங்களாக நூற்றுக்கும் மேற்பட்ட பொது மக்களும் இக் கரந்துரையாடலில் கலந்து கொண்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY