பெண்களுக்கு வாக்களிக்க வேண்டாம் என கூறி பெண்களின் அரசியல் ஜனநாயக உரிமைக்கு முட்டுக் கட்டையாக இருக்க வேண்டாம் கீர்த்தி தென்னககோன்

0
141

விசேட நிருபர்

பெண்களுக்கு வாக்களிக்க வேண்டாம் என கூறி பெண்களின் அரசியல் ஜனநாயக உரிமைக்கு முட்டுக் கட்டையாக இருக்க வேண்டாம் என சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கமான கபே அமைப்பின் நிறைவேற்று அதிகாரி கீர்த்தி தென்னககோன் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் (4.1.2018) வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

மட்டக்களப்பு கிறீன் கார்டன் ஹோட்டலில் நடைபெற்ற இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் யாரும் யாருக்கும் வாக்களிக்க வேண்டாம் என பிரச்சாரம் செய்ய முடியாது.

புத்தளம் பிரதேசத்தில் இருந்து பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றன.

புத்தளத்தில் பெண்களுக்கு வாக்களிக்க வேண்டாமென ஒரு அமைப்பினர் கோரியுள்ளதாக அறிய முடிகின்றது.

ஒவ்வொரு உள்ளுராட்சி மன்றத்திலும் 25 வீதமான உறுப்பினர்கள் பெண்களாக இருக்க வேண்டும் என்பது புதிய தேர்தல் முறையின் கீழ்; மிக குறிப்பிடப்பட்டுள்ள விடயமாகும்.

பெண்களுக்கு வாக்களிக்க வேண்டாம் என்ற கோஷம் எழுப்புவதனூடாக பெண்களின் அரசியல் உரிமைக்கு ஒரு முட்டுக்கட்டையாக அமைகின்றது. ஜனநாயக ரீதியாக பெண்கள் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும் முடியாத சூழ் நிலைக்காணக் கூடியதாகவுள்ளது.

சாய்ந்தமருது பிரதேசத்திற்கு தனியான பிரதேச சபை வேண்டுமென பல்வேறு சிவில் அமைப்புக்களும் வேண்டியிருந்தார்கள்.

அந்த வேண்டுகோளை அரசியல் கட்சிகள் நிறைவேற்றததால் அந்தப் பிரதேசத்தில் ஒரு சுயேட்சைக்குழுவொன்று போட்டியிடுகின்றது.

அந்த பிரதேசத்தில் ஆறு வட்டாரங்களில் போட்டி இடம் பெறுகின்றன.

சாய்ந்தமருது பிரதேசத்திலுள்ள அனைவரிடமும் நாங்கள் விடுக்கும் வேண்டுகோள் என்னவென்றால் அரசியல் உரிமை ஜனநாயக உரிமை எல்லோருக்கும் கிடைக்க வேண்டிய மிக முக்கியமான உரிமையாகும்.

கட்சிக்கோ சுயேட்சைக்குழுவுக்கோ வாக்குகளை வழங்குவதா இல்லை என்பதை வாக்காளர்கள்தான் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்

எந்தவொரு கட்சிக்கோ அல்லது சுயேட்சைக்குழுவுக்கோ முடியாது நமது பிரதேசத்தில் வேறு கட்சிகள் வேறு சுயேட்சைக்குழுக்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட முடியாது. தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது வாக்களிப்பு நிலையங்களுக்கான முகவர்களை நியமிக்க முடியாது என்ற அச்சுறுத்தலை யாருக்கும் வழங்க முடியாது.

பிரதேசத்தில் போட்டியிடுகின்ற அனைத்து கட்சிகளுக்கும் சுயேட்சைக்குழுக்களுக்கும் தேர்தல் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபடுவதற்கான சுமூகமான ஒரு சூழலை அனைவரும் உருவாக்கி கொடுக்குமாறு அனைவரிடமும் கேட்டுக் கொள்கின்றோம்.

யாழ்ப்பாணத்தில் சிவசேனா எனும் ஒரு அமைப்பினர் இந்து மத வேட்பாளர்களுக்கு மாத்திரம் தான் வாக்களிக்க வேண்டும் என பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தப் பிரதேசத்தில் போட்டியிடுகின்ற கத்தோலிக்க வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டாம் என்ற பிரச்சாரத்தினை முன்னெடுத்து செல்கின்றனர்.

எந்தவொரு பிரதேசத்திலும் சுதந்திரமான முறையில் தேர்தல் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபடக் கூடிய சந்தர்ப்பம் இருக்க வேண்டும்.

கிறிஸ்தவ வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டாம் இந்து வேட்பாளர்களுக்கு மாத்திரம் தான் வாக்களிக்க வேண்டும் என்று சொல்வதற்கு யாருக்கும் உரிமை கிடையாது.

யாருக்கு வாக்களிப்பது என்று வேட்பாளர்கள் தீர்மானிக்க முடியாது. அதனை வாக்காளர்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.

கடந்த காலத்தில் வட மாகாணத்தில் பௌத்த மத குருக்களை கொண்ட கட்சி போட்டியிட்டது. சுதந்திரமாக தேர்தல் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டார்கள். ஆனால் வாக்காளர்கள் தீர்மானித்தார்கள்.

அதே போன்று குருநாகல் பிரசேத்தில் கடந்த பாராளுமன்ற தேர்தலில் மஹிந்த ராஜபக்ச வேபாட்டியிட்ட போது அஹ்கு சிவாஜி லிங்கம் சென்று சுயேட்சையாக போட்டியிட்டார்.

அனைவரும் எங்கும் போட்டியிடக் கூடிய கலாசாரத்தினை கட்சிகளும் சுயேட்சைக்குழுக்களும் ஏற்படுத்த வேண்டும் என்றறார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கபே அமைப்பின் தேசிய அமைப்பாளர் எம்.மனாசிர், அதன் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர்களான கே.காண்டீபன், N;ஜ.எப்.காமிலா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

DSC03601 DSC03609

LEAVE A REPLY