இம்முறை வெற்றி வாய்ப்புள்ள அனைத்து சபைகளிலும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் யானைச் சின்னத்திலேயே களமிறங்கியுள்ளது- நசீர் அஹமட்

0
274

நாட்டில் உள்ளூராட்சித்தேர்தலில் ஐக்கியத் தேசியக் கட்சிக்கு வெற்றிமேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் யானைச்சின்னத்தில் போட்டியிடுவதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் முன்னாள் கிழக்கின் முதல்வருமான நசீர்அஹமட்தெரிவித்தார்.

இம்முறை வெற்றிவாய்ப்புள்ள அனைத்து சபைகளிலும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் யானைச்சின்னத்தில்கேட்டு வெற்றிக்கான பாதையை திறந்துள்ளதாக முன்னாள் முதலமைச்சர் நசீர் அஹமட் குறிப்பிட்டார்.

ஏறாவூர் ரகுமானியா வட்டாரத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயெ கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதல்வர் இதனைக் கூறினார்,

அங்குதொடர்ந்நதும் உரையாற்றிய முன்னாள் கிழக்கு முதல்வர்.

இம் முறை நாடளாவிய ரீதியில் வெற்றிலைச்சின்னத்துக்கு வெற்றிவாய்ப்புக்கள் குறைவாகவும் மற்றும் தாமரைச்சின்னத்துக்கு அதைவிட குறைவாகவும் உள்ள நிலையில் ஐக்கியத் தேசியக் கட்சிக்கான வெற்றி வாய்ப்புக்களே அதிகளவில் காணப்படுகின்றது,

இந்நிலையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் யானைச் சின்னத்தில் வெற்றியை நோக்கிய நகர்வை முன்னெடுத்துள்ளது

கடந்த பாராளுமன்றத் தேர்தலிலும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கியத்தேசியக் கட்சியுடன் இணைந்தே களமிறங்கியது,

இதன் மூலம் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் கோட்டையில் யானைச்சின்னத்தில் போட்டியிட்டே ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் வெற்றி பெற்றது என்பதை யாரும் மறந்துவிடலாகாது.

கடந்த கால வரலாற்றில் மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்கள் எமக்கு இதற்கு வழிகாட்டியுள்ளார்கள்,

பிரேமதாசவுடன் ஆட்சிமைத்த காலத்தின் பிற்பகுதியில் தேர்தல் வந்த போது அப்போது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் வாக்கு கேட்ட சந்திரிக்கா அம்மையாருக்கு வாய்ப்பான சூழல இருந்தபோது அவருடன் இணைந்த கேட்டுவெற்றியை உறுதிப்படுத்திக் கொண்டார்.

ஆகவே இம் முறை யானைக்கு வாக்களித்து நாம் அனைத்து சபைகளையும் வெற்றிக் கொள்ளகைக்கோர்க்க வேண்டும் என கிழக்கின் முன்னாள் முதலமைச்சர் நசீர் அஹமட்கேட்டுக் கொண்டார’.

LEAVE A REPLY