காத்தான்குடியில் 142 பொலிஸ் உத்தியோகத்தர்களின் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு..

0
369

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி பிரதேசத்தை தளமாகக் கொண்டு இயங்கிவரும் சமூக சேவை அமைப்பான ஓருங்கிணைப்பு, நல்லிணக்கம் விழுமியங்களுக்கான மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில் காத்தான்குடி பொலிஸ் நிலையத்திலுள்ள 142 பொலிஸ் உத்தியோகத்தர்களின் பிள்ளைகளுக்கு வழங்குவதற்காக கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு அண்மையில் காத்தான்குடி பிரதேச செயலக மகாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

(CARES ) ஓருங்கிணைப்பு, நல்லிணக்கம் விழுமியங்களுக்கான மத்திய நிலையத்தின் தலைவர் டாக்டர் எம்.எம்.எம்.அயாஷ் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கபில ஜெயசூரிய கலந்து கொண்டதோடு கௌரவ மற்றும் சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜெயகொட ஆராச்சி ,காத்தான்குடி பிரதேச செயலாளர் உதயகுமார் உதயஸ்ரீதர்,மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்டசகர் சமன் யட்டவர,ஆரையம்பதி பிரதேச செயலாளர் திருமதி எஸ்.சத்தியானந்தி,காத்தான்குடி நகர சபை செயலாளர் திருமதி. எம்.ஆர்.எப்.றிப்கா ஷபீன்,களுவாஞ்சிக்குடி பிராந்தியத்திற்கான உதவிப் பொலிஸ் அத்தியட்கசர் எல்.கே.குமாரசிறி ,காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நிஷாந்த பிரபாத் கஸ்தூரி ஆராச்சி,காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எம்.எஸ்.எம்.ஜாபிர் உட்பட உலமாக்கள்,ஊர்பிரமுகர்கள்,கல்வியலாளர்கள், ஓருங்கிணைப்பு, நல்லிணக்கம் விழுமியங்களுக்கான மத்திய நிலையத்தின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது பிரதம அதிதி கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கபில ஜெயசூரிய உள்ளிட்ட ஏனைய அதிதிகளினால் காத்தான்குடி பொலிஸ் நிலையத்திலுள்ள 142 பொலிஸ் உத்தியோகத்தர்;களுக்கு அவர்களின் பிள்ளைகளுக்கு வழங்குவதற்காக கற்றல் உபகரணங்கள் உத்தியோகபூர்வமாக வழங்கிவைக்கப்பட்டது.

‘மாணவர்களுக்கு கற்கை உபகரணங்கள் வழங்குவதன் மூலம் சமூகங்களிடையே சமாதானத்தையும்,நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்கான செயற்திட்ட முன்மொழிவு’ என்ற தொனிப்பொருளை அடிப்படையாகக் கொண்டு இயங்கிவரும் ஓருங்கிணைப்பு, நல்லிணக்கம் விழுமியங்களுக்கான மத்திய நிலையமானது அண்மையில் வறிய 50 தமிழ் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்ததோடு தற்போது 142 பொலிஸ் உத்தியோகத்தர்களின் பிள்ளைகளுக்கு வழங்குவதற்காக சுமார் ஒரு இலட்சத்து அறுபது நாயிரம் ரூபா பெறுமதியான கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.

3-DSC_0446 4-DSC_0488 5-DSC_0495 6-DSC_0504 7-DSC_0516 2-DSC_0349 8-DSC_0534 10-DSC_0569 11-DSC_0555 12-DSC_0605 15-DSC_0442 14-DSC_0452 13-DSC_0634

LEAVE A REPLY