அமைச்சு பதவி தருகிறேன் வாருங்கள் என ஜனாதிபதி எங்களுக்கு தூது அனுப்புகிறார்

0
206

அமைச்சுப் பதவி தருகிறோம், எங்களோடு வந்து இணையுங்களென சு.கவினர் அழைக்கின்ற போதும்,அவர்கள் உத்தியோக பூர்வமாக ஐக்கிய தேசிய கட்சியுடனான உறவை முறித்து வெளியேறினால் நாங்கள் மஹிந்த தலைமையில் அவர்களுடன் இணைந்து கொள்வதற்கு தயாராக உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

குருனாகலையில் 2018 01 04 இடம்பெற்ற கூட்டத்தில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

சு.கவினர் மற்றும் ஐ.தே.கவினர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் மக்கள் செல்வாக்கு கண்டு திகைத்து நிற்கின்றனர்.அதனை தடுப்பதற்கு என்னவெல்லாம் வழிகள் இருக்குமோ அத்தனை வழிகளையும் செய்து கொண்டுமிருக்கின்றனர்.பதவி ஆசை காட்டி முன்னாள் ஜனாதிபதியுடன் உள்ள சிலரை கழற்றுவது,அவர்களது திட்டம்.

அந்த வகையில் சு.காவின் முக்கியஸ்தர் ஒருவர் என்னிடம், தங்களோடு வந்து இணையுமாறும், அப்படி இணைந்தால் பிரபல அமைச்சுப் பதவி தருவதாகவும் கூறினார்.முன்னாள் ஜனாதிபதியின் அரசியல் பயணத்தில் இணைந்திருக்கும் நாங்கள் பதவி, பட்டங்களுக்காக அவர்களுடன் ஒட்டிக்கொண்டிருக்கவில்லை.இதனை என்னோடு பேசியவர் நன்கு உணர்ந்திருப்பார்.இதன் பிறகு முன்னாள் ஜனாதிபதியுடன் இணைந்துள்ளவர்களிடம் இப்படியான பேச்சுக்களை பேசும் போது, அவர் மிகவும் கவனமாக பேசுவார் என்றும் நம்புகிறேன்.

அதன் போது அவர்கள் ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து விலகி தனித்து ஆட்சியமைக்கப்போவதாகவும் கூறினார்.எமது பிரச்சினை என்ன என்பதையும், நாம் எதனை கூறினால் எம்மை, அவர்கள் பக்கம் வீழ்த்தலாம் என்பதையும் நன்கு அறிந்துள்ளார். இவர்களின் வாய் பேச்சை நம்பி, நாங்கள் செல்ல முடியாது. எங்கள் அணியினரது பிரச்சினையே நாங்கள் மிகவும் நேசித்த கட்சியை யானையிடம் அடகு வைத்திருப்பது தான்.

இவர்கள் உத்தியோக பூர்வமாக ஐக்கிய தேசிய கட்சியுடனான் உறவை துண்டித்தால், நாங்கள் அவர்களுடன் இணைந்துகொள்ள தயாராக உள்ளோம். எது எவ்வாறு இருப்பினும், இது சு.கவுக்கும் ஐக்கிய தேசிய கட்சிக்கும் இடையில் பாரிய பிளவு உள்ளதை எடுத்துக்காட்டுகிறது. இவை அனைத்தும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் தூய்மையான அரசியல் பயணத்துக்கு சாதகமாகவே அமைந்துள்ளது என அவர் குறிப்பிட்டார்.

image_6483441 (2) image_6483441 (3)

LEAVE A REPLY