(கிண்ணியாவில் கட்டாக்காலி மாடுகளின் தொல்லைக்கு தீர்வே இல்லையா?

0
189

(ஹஸ்பர் ஏ ஹலீம்)

பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நீங்கள் கட்டாக்காலி மாடுகளின் தொல்லைக்கு ஏன் தீர்வில் தாமதம்? கிண்ணியா நகர சபை செயலாளருக்கு

 

கிண்ணியா நகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வீதியோரங்களில் இரவிலும் பகல் நேரங்களிலும் கட்டாக்காளி மாடுகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

கிண்ணியா புஹாரி சந்தி தொடக்கம் டீசந்தி மட்டக்களப்பு பிரதான வீதி உட்பட உள்வீதிகளிலும் கட்டாக்காளி மாடுகளின் தொல்லை அதிகரித்து காணப்படுகிறது இதனால் வீதிகளை மலம் கழித்து நாசமாக்கப்படுவதும் இரவு நேரங்களில் போதிய மின்வெளிச்சமின்மையாலும் வீதி விபத்துக்கள் மாடுகளுடன் மோதுண்டு நடைபெறுவதாகவூம் மக்கள் தெரிவிக்கின்றனர்.

அண்மையில் இவ்விடயம் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுப்பதாக ஊடகங்களுக்கு அறிக்கையிட்ட போதும் இது வரைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளாது தாமதிப்பது ஏன் என கிண்ணியா நகர சபை செயலாளரை மக்கள் கேட்டு நிற்கின்றனர்.இவ்விடயம் தொடர்பில் ஊடகங்கள் வாயிலாக பல தடவைகள் சுட்டிக் காட்டப்பட்டும் நடவடிக்கைகள் எடுக்காமை ஏன் எனவும் மக்கள் அங்கலாய்க்கின்றனர்.வீதி விபத்துக்களிலிருந்தும் உயிரை பாதுகாக்கவும் கிண்ணியா நகர சபையின் செயலாளர் முன்வருமாறும் கோரிக்கை விடுக்கப்படுகிறது

மேலும் வீதி விபத்துக்கள் உட்பட பல அசௌகரியங்களை எதிர்நோக்குவதாகவும் மக்களால் தெரிவிக்கப்படுகிறது.கிண்ணியா நகர சபையினால் அண்மையில் இவ்விடயம் தொடர்பில் கட்டாக்காளி மாடுகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தல் எனும் அறிவித்தல் ஊடகங்களில் விடுக்கப்பட்டும் உரிமையாளர்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவித்தும் இது வரைக்கும் இரண்டு மாதங்கள் கடந்த நிலையில் கட்டாக்காலி மாடுகளின் தொல்லையின் கட்டுப்பாடு நடவடிக்கைகளுக்கு தீர்வின்மையால் கட்டாக்காளி மாடுகளின் தொல்லை அதிகரித்து காணப்படுகிறது.எனவே கிண்ணியா நகர சபை இவ்விடயம் தொடர்பில் கடும் நடவடிக்கைகளை அவசரமாக மேற்கொள்வதோடு கட்டாக்காளி மாடுகளை வீதியோரங்களில் நடமாடுவதை கட்டுப்படுத்துமாறும் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

20171014_230209

LEAVE A REPLY