அரசாங்க அலுவலர்கள் 2018 ஆம் ஆண்டு – கடமைகளை சத்தியப் பிரமானத்துடன் ஆரம்பம்

0
265

(ஹஸ்பர் ஏ ஹலீம்)

அதிமேதகு சனாதிபதிஅவர்களினால் 2018 ஆம் ஆண்டானது உணவு உற்பத்தி ஆண்டாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதன் அடிப்படையில் நிலைபேறான விவசாய அபிவிருத்தி இலக்கினை அடைந்து கொள்வதனை முதன்மையாகக் கொண்டு அனைத்து அரசாங்க அலுவலர்களும் அர்ப்பணிப்புடன் பணியாற்றத்தக்க மனப்பாங்கை வளர்த்துக் கொள்ளும் அவசியத்தினை வலியுறுத்தி கடமைகளை தொடங்கும் முதல் நாளான 2018 ஜனவரி மாதம் 02 ஆந் திகதி இன்று செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு சகல அரச ஊழிர்களின் பங்குபற்றலோடு விஷேட நிகழ்ச்சிததிட்டமொன்று கிண்ணியா நகர சபையின் செயலாளரும், விஷேட ஆணையாளருமான என்.எம். நௌபீஸ் தலைமையில் இடம்பெற்றது.

இன்நிகழ்வின் போது

தேசிய கொடி ஏற்றப்பட்டதுடன் தேசிய கீதம் இசைக்கப்பட்டு படைவீர்ர்கள் உள்ளிட்ட நாட்டுக்காக உயிர்த்தியாகம செய்த சகலரையும் நினைவுகூர்வதற்காக இரண்டு நிமிடம் மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

இலங்கையினுள் நிலைபேறான விவசாய அபிவிருத்தியினை அடைந்து கொள்ளும் நிழகழ்ச்சித்திட்டத்திற்காக ஆளணியினர் அனைவரினதும் பங்களிப்பு நேர்மையானதாகவும், ஊழலற்ற முறையில் மிகுந்த அர்ப்பணிப்புடன் வழங்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி சுருக்கமாக செயலாளர் அவர்களினால் உரைநிகழ்த்தப்பட்டது.

FB_IMG_1514886024363FB_IMG_1514886006361 (1)

FB_IMG_1514886019805

LEAVE A REPLY