ஊழலை ஒழித்து மக்களுக்கே வழி விடுவோம். ஆயிலியடி மஜீத் நகர் வட்டார தேசிய காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.எம்.ஸிஹாஜித்

0
117

(ஹஸ்பர் ஏ ஹலீம்)

ஊழலை ஒழித்து மக்களுக்கான சேவைகளை விரிவுபடுத்துவதே எமது உள்ளூராட்சி தேர்தலின் நாம் களமிறங்கக் காரணமாக அமைந்துள்ளது என கிண்ணியா பிரதேச சபை தேர்தலில் ஆயிலியடி மஜீத் நகர் வட்டாரத்தில் தேசிய காங்கிரஸ் கட்சி சார்பாக குதிரை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் எஸ்.எம்.ஸிஹாஜித் நேற்று (01) நடைபெற்ற மக்களுடனான சந்திப்பின்போதே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

கடந்த காலங்களில் கிண்ணியா பிரதேச சபைகளில் பல ஊழல் மோசடிகள் இடம்பெற்றுள்ளன வீதி அபிவிருத்தி உட்பட பல அபிவிருத்திகளில் மக்களின் வரிப்பணம் சூரையாடப்பட்டுள்ளது. இம்முறை அவ்வாறானதொரு ஊழல் இடம்பெறாவண்ணம் எமது கட்சியின் தேசிய காங்கிரஸை பலப்படுத்துவதன் ஊடாக இவ்வட்டார மக்களுக்கு மாத்திரமல்ல முழு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட ஊழல்கள் இடம் பெறா வண்ணம் தங்களது நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல உங்களுடைய ஒத்துழைப்புக்களே அவசியமாகும்.

அரச அதிகாரிகள் மக்களுக்காகவே அரச சேவையில் ஈடுபாடு காட்டுபவய்களாக இருக்கிறார்கள் அதனை விடுத்து மக்களுடைய சொத்துக்களை ஊழல் மோசடிகளுக்கு இட்டுச் செல்வது பெரும் அணியாயமாகும் எமது பிரதேசத்தில் கடந்த காலங்களில் ஏழை மக்களுக்கு வந்த தங்களது பொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்தலில் சமுர்த்தி வீட்டுத் திட்ட மோசடிகளை அறிந்திருப்போம் அது போன்று பல மோசடிகள் இடம்பெற்றிருக்கின்றன.

இனிமேலும் அவ்வாறான மோசடிகள் இடம்பெறக்கூடாது எனவே எமது கட்சிக்கு வாக்களித்து என்னை தெரிவு செய்வதன் மூலம் மக்களுக்காகவே என்றும் இருப்பேன் எனவும் இதை விடுத்து பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து ஒரு போதும் மக்களை ஏமாற்ற நினைக்கும் எண்ணம் எம்மீது கிடையாது மக்களுக்கான ஒருமித்த குரலாகவே நாம் செயற்படுகிறோம்.

எமது கிராமம் பல பின்னடைவுகளை எதிர்நோக்குகிறது அபிவிருத்திகளிலும் புறக்கணிக்கப்படுகிறது எமது சமூகம் எமது கிராமம் முன்னேற வழிவகுப்பதற்கான தேர்தலாக இத்தேர்தல் அமைய வேண்டும் அத்தனைக்கும் மக்களாகிய உங்களது ஒத்துழைப்பே எமக்கு என்றும் தேவை வரலாறு காணாத வெற்றியை எமது மண்ணுக்கு பெற்றுக் கொடுப்பது அது எனது வெற்றியல்ல ஒட்டுமொத்த எமது சமூகத்தின் வெற்ளியாகும்.

கடந்த அரசாங்த்தில் இருந்த அதிகாரிகள் பல மோசடிகளிலும் ஈடுபட்டதைக் கண்டுள்ளோம் இனிமேலும் அரச அதிகாரிகப் அவ்வாறின்றி மக்களுடைய தேவைகளை அரச சேவையின் ஒரு பதிலீடாக வீடு தேடிச் சென்று பெற்றுக் கொடுக்க வேண்டும். அவ்வாறானதொரு புதிய கொள்கைகளையும் எதிர்காலத்தில் உருவாக்குவாய்கள் எனவும் நம்புகிறோம் என மேலும் மக்கள் சந்திப்பின்போது அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY