கிண்ணியா நகரசபைக்கு உழவு இயந்திரங்கள் வழங்கி வைப்பு

0
246

(ஹஸ்பர் ஏ ஹலீம்)

கிண்ணியா நகரசபைக்கு கரையோர பாதுகாப்புத் திணைக்களத்தினால் புதிதாக இரண்டு உழவு இயந்திரங்கள் நேற்று(31) ஞாயிற்றுக் கிழமை கிண்ணியா நகர சபையின் செயலாளர் என்.எம்.நௌபீஸிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது,

அதற்கான ஆவணங்கள் கரையோரப் பாதுகாப்பு உத்தியோகத்தரினால் வழங்கி வைக்கப்பட்டது. அதனடிப்படையில் இதனைப் பெற்றுத் தருவதற்கு உதவி வழங்கியவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதுடன், குறித்த உழவு இயந்திரங்கள் அடுத்த வாரத்தில் இருந்து பாவனைக்கு விடப்பட உள்ளதாக இதன்போது கிண்ணியா நகர சபையின் செயலாளர் என்.எம்.நௌபீஸ் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY