திறந்து மூடும் ஓட்டமாவடி நவீன சிறுவர் புங்கா பற்றிய சிறுகுறிப்பு: செயலாளரே இது உங்களின் கவனத்திற்கு!

0
242

(எம்.ரீ.எம்.பாரிஸ்)

ஓட்டமாவடி பிரதேச சபைக்கு சொந்தமான நவீன சிறுவர் பூங்காவினை பழுது படுத்தியவர்கள் கடந்த காலங்களில் பிரதேச சபையில் செயலாளராகவும் அதற்கு பொறுப்பாக நியமிக்கப்பட்ட சபை ஊழியர்களுமே என்ற குற்ற சாட்டினை எம்மால் ஆதார பூர்வமாக முன்வைக்க முடியும்.

ஆரம்பகட்டத்தில் இச்சிறுவர் புங்கா அமைப்பது தொடர்பில் பல சர்ச்சைகள் இடம் பெற்ற பொழுதிலும் அவ்விடத்தில் சிறுவர் பூங்கா அமைப்பது என்பது சிறுவர்கள் விளையாடுவதற்கு உகத்தது அல்ல என்ற புவியல் மற்றும் சூழல் ரீதியான ஆய்வினை மேற்கொண்ட திட்ட மதிப்பிட்டு குழு தமது திட்ட அறிக்கையில் முன்வைத்துள்ளது.

அந்த ஆலோசனைகளையும் மீறி எமது பிரதேசத்திற்கு கிடைக்கப்பெற்ற நிதி மீண்டும் திரைசேரிக்கு திரும்பி விடக் கூடாது என்பதற்காக பல முயற்சிகளை அக்கால சபையின் தவிசாளர்,உறுப்பினர்கள் மேற்கொண்டு புங்கா அமைக்கப்பட்டாலும் அப்புங்காவினை முறையாக பராமரிக்காமையினால் இழுத்து மூடப்பட்டது என்பது மிக கவலையான விடயமாகும்.

இவ்விடயம் தொடர்பில் பலர் இப்பிரதேசத்தின் செய்தியாளர் என்ற முறையில் எனக்கு இச்சிறுவர் புங்கா மூடிகிடப்பது தொடர்பில் தெரிவித்தனை அடுத்து நான் அங்கு செய்தி சேகரிக்க சென்ற போது குறிந்த சிறுவர் பூங்கா வளாகத்தில் யாரும் இல்லை எனது படம்பிடிப்பு பணிகளை முடித்துக்கொண்டு அவ்விடத்தில் இருத்து புறப்படும் போது தீடிர் என அங்கு வருகை தந்த ஊழியர்கள் சிலர் என்னை அச்சுறுத்தியதுடன் தகாத வார்த்தை பிரயோகங்களையும் பிரயோகித்தனர் அதன் பின்னர் வாழைச்சேனை பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு அறிவித்தனை அடுத்து விரைவாக அங்கு விரைந்த பொலீசார் அவர்களிடம் இருத்து என்னை மீட்டனர். அவர்களின் உதவியுடன் அங்கு இருந்து பாதுகாப்பாக நான் எனது வீடு வந்து சேர்ந்தோன்.

அதன் பின்னர் இது தொடர்பாக மூன்றுக்கு மேற்பட்ட செய்திகளை தேசிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்த பிறகு தான் இப்பிரச்சினைக்கு தீர்வு கிட்டியது பலர் இதனை பற்றி பேச ஆரம்பித்தனர்.

மேலும்உள்ளுராட்சி உதவி ஆணையாளரால் புங்காவினை மேற்பார்வை செய்ய நியமிக்கப்பட்டிருந்த ஊழியா் ஒருவா் இடம்மாற்றம் செய்யப்பட்டார்.

அதன் பின்னர் மூன்று மாத காலம் சிறப்பாக இயங்கியது மீண்டும் அது மூடப்பட்டது. இருப்பினும் எமது முயற்சியை நாம் கைவிட வில்லை பல முறை பிரதேச அபிவிருத்தி குழு கூட்டங்களில் கேள்வி எழுப்பியும் எவ்வித பயனும் கிட்டவில்லை விசாரனை குழு அமைத்தார்கள் அது தொடர்பாக ஆணைக்குழுவிற்கு விசாரனைக்காக பிரதேச செயலகம் நடவடிக்கை எடுப்பதாக கூறி பிரதேச அபிவிருத்தி குழு தீர்மாணம் நிறைவேற்றப்பட்டது அதிலும் பலன் ஒன்றும்மில்லை

கொடிக்கணக்கான ரூபாய் மக்களின் பணம் வீன்விரையம் செய்யப்பட்டது மாத்திரம் தான் இறுதியில் மிஞ்சியது ஒரு சிலர் இது தொடர்பில் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அச்சுறுத்தினர் சிலர் இப்பிரச்சினையை அரசியலாக மாற்ற முனைத்தனர்.

அதன் பின்னர் கவலையோடு எனது முயற்சி கைவிடப்பட்டது இருப்பினும் இது தொடர்பாக மட்டக்களப்பு உள்ளுராட்சி உதவி ஆணையாள் திரு சித்திரவேல் ஐயா அவர்களின் கவனத்திற்கு அடிக்கடி இவ்விடயத்தினை கொண்டு சென்றேன். அவரின் அதிரடி நடவடிக்கை காரணமாக அது திறக்கப்பட்டது இருப்பினும் சில காலங்களில் பொறுப்பற்ற சபையின் செயலாளரால் மீண்டும் மூடப்பட்டது.

011எது எவ்வாறாயினும் தற்போது இடம் மாற்றம் செய்யப்பட்டு வருகை தந்திருக்கும் எனது நண்பர் சக ஊடவியலாளராக பணியாற்றிய ஓட்டமாவடி பிரதேச சபையின் செயலாளா் ஹமீம் அவர்கள் அதனை இயங்க செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றார் என்பதனை முகநூல் செய்தி ஒன்றின்னூடாக நான் அறிந்தேன் அது மகிழ்சி அளித்தாலும் ஒரு புறம் கவலை அளிக்கின்றது.

ஏன் என்றால் அங்கு பொறுந்தப்பட்டுள்ள விளையாட்டு உபகரணங்கள் அதிகமானவை மழைகாலங்களில் மழைநீரால் அல்லது அருகில் உள்ள ஆற்று நீர் மேல்லோங்கி வெள்ளம் ஏற்படும் போது முற்றாக சிறுவர் புங்கா வளாகம் பாதிப்படையும் இதனால் விளையாட்டு உபகரணங்கள் பழுதடையும். அவ்வாறே கடந்த காலங்களில் நிகழ்ந்துள்ளது.

அதனை பாதுகாப்பதற்கான எந்த பொறி முறையையும் இச்சபையால் மேற்கொள்ளவில்லை மீண்டும் அங்கு புதிதாக விளையாட்டு உபகரணங்களை பொருத்துவது தொடர்பில் முறையாக ஆராய்ந்த பின்னரே அதனை மேற்கொள்ளுமாறு சபையின் செயலாளரிடம் இப்பிரதேச மக்கள் சார்பில் கேட்டுக்கொள்கின்றோம்.

அதுபோன்று மாஞ்சோலை கிராமத்தில் காணப்படும் சிறுவர் புங்காவையும் பிரதேச சபை உரிய முறையில் பொறுப்பேற்று பராமரிக்க வேண்டும் அப் புங்கா தனி நபர்களது ஆளுகையின் கீழ் இருத்து வருகின்றமையினை எம்மால் அவதானிக்க முடிகின்றது.

இது விடயத்தில் எதிர்காலத்தில் இப்பிரதேச சபையினை ஆட்சி செய்ய வரும் கௌரவ பிரதேச சபையின் தவிசாளர்,உறுப்பினர்கள்,அரச அதிகாரிகள் அதித கவனம் செலுத்த வேண்டும் என்பது எமது மக்களின் எதிர்பார்ப்பாகும்.

LEAVE A REPLY