கல்குடா ஜம்இயது தஃவதில் இஸ்லாமியாவினால் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

0
111

_DSC1582(ஓட்டமாவடி எச்.எம்.எம்.பர்ஸான்)

கல்குடா ஜம்இயது தஃவதில் இஸ்லாமியாவின் சமூக சேவைப் பிரிவினால் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு 30ம் திகதி மீராவோடை தாருஸ்ஸலாம் ஜும்ஆப் பள்ளிவாயலின் மேல்மாடியில் நடைபெற்றது.

ஜம்இய்யாவின் செயலாளரும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தருமான அஷ்ஷெய்க் எஸ்.எச். அரபாத் ஸஹ்வி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு சர்வேதேச இஸ்லாமிய நிவாரண அமைப்பின் இலங்கைக் கிளைக்கான செயலாளர் அஷ்ஷெய்க் உவைஸ், மாவடிச்சேனை அல் இக்பால் வித்தியாலய அதிபர் யூ.எல்.எம். சல்மானுல் ஹரீஸ், மூக சேவைப் பிரிவின் இணைப்பாளர் ஏ.எல்.பதுருதீன் சஹ்வி, அப்துர்ரஹ்மான் அஸ்கரி மற்றும் உலமாக்கள் பெற்றோர்கள் மாணவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

_DSC1610

LEAVE A REPLY