ஓட்டமாவடி மத்திய கல்லூரி கணித, விஞ்ஞான பிரிவில் சாதனை; ஒட்டு மொத்த பாடசாலை நிருவாகத்தின் திட்டமிடலாமும்: நவாஸ் ஆசிரியர்

0
280

sdg(ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்)

தனது நூற்றாண்டு விழாவினை இவ்வருடம் தேசியத்திற்கு எடுதுக்காட்டாக கொண்டாடிய ஓட்டமாவடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலையின் இம்முறை வெளியான உயர்தர விஞ்ஞான, கணித பிரிவில் வரலாற்றில் என்றும் இல்லாதவாறு சாதனை படைதுள்ளமையானது பாடசாலையின் நிருவாகத்தின் சிறந்த திட்டமிடலும் அதனோடு சேர்த்து இறைவன் நூற்றாண்டினை கொண்டாடிய பாடசாலைக்கு வழங்கியுள்ள பரிசும் ஆகும் என விஞ்ஞான கணித பிரிவிற்கு பொறுப்பான ஆசிரியர் எம்.எம்.நவாஸ் தெரிவிக்கின்றார்.

அந்த வகையில் இம்முறை வெளியான பெறுபேற்றில் வைத்திய துறைக்கு மூன்று மாணவர்களும், பொறியல் துறைக்கு நான்கு மாணவர்களும் தெரிவாகியுள்ளதோடு அதில் ஒரு மாணவன் மூன்று பாடங்களிலும் ஏ தரத்தில் சித்தியடைந்துள்ளதுடன் மாவட்டத்தில் இரண்டாம் இடத்தினையும் பெற்றுள்ளார். அத்தோடு நாற்பதிற்கும் அதிகமான மாணவர்கள் பல்வேறு துறைகளுக்கான பல்கலை கழக அனுமதியினை பெறும் வாய்ப்பினையும் பெற்றுள்ளமை பாடசாலை வரலாற்றில் விஞ்ஞான, கணித பிரிவிற்கு கிடைத்துள்ள பாரிய வெற்றியாக பார்க்கப்படுகின்றது.

கல்குடா பிரதேசத்தில் இருக்கின்ற பாடசாலைகளில் முக்கிய பாடசாலையாக கருதப்படுகின்ற குறித்த ஓட்டமாவடி மத்திய கல்லூரியானது தற்பொழுது மாவட்டத்திற்கு அப்பால் சென்று வெளி மாவட்டங்களிலும் பேசப்படும் அளவிற்கு இம்முறை வெளியாகியுள்ள உயர்தர பரீட்ச்சை முடிவுகள் எடுத்துக்காட்டுவதாகவும் அதிலும் முக்கியமாக விஞ்ஞான-கணித பிரிவு அடைந்துள்ள வெற்றியானது ஒட்டுமொத்த கல்குடா சமூகத்திற்கும் பாடசாலைக்கும் கிடைத்துள்ள வெற்றியாக பார்க்கபடுகின்றது என குறித்த விஞ்ஞான பிரிவிற்கு பொறுப்பான அசிரியர் நவாஸ் தெரிவிக்கின்றார்.

மேலும் குறித்த பாடசாலையில் கற்கின்ற மாணவர்களின் பெற்றோர்கள் விடுகின்ற பிழைகள், வெளிமாவட்ட பாடசலைக்களுக்கு மாணவர்களை உயர்தரத்திற்கு கொண்டு செல்லுதல், பாடசாலைக்கு கணித, விஞ்ஞான துறைக்கு தேவையாக உள்ள விடயங்கள், சமூகம் மற்றும் பொது அமைப்புக்கள் பாடசலைக்கு செய்ய வேண்டிய விடயங்கள், அரசியல் வாதிகளிடம் இருந்து விஞ்ஞான, கணித பிரிவு எதிர்ப்பார்ப்பவைகள், போன்ற விடயங்கள் சம்பந்தமாக நவாஸ் ஆசிரியர் தெரிவித்த கருத்துக்கள் அடங்கிய காணொளி எமது இணைய நாளிதழ் வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY