காத்தான்குடி நகர சபையில் திண்மக்கழிவு முகாமைத்துவ செயலணி ஆரம்பிப்பு

0
255

(விஷேட நிருபர்)

காத்தான்குடி நகர சபையில் திண்மக்கழிவகற்றல் தொடர்பில் திண்மக்கழிவு முகாமைத்துவ செயலணி ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி நகர சபையின் செயலாளர் திருமதி பாத்திமா றிப்கா ஸபீன் தெரிவித்தார்.

திண்மக்கழிவகற்றல் தொடர்பில் காத்தான்குடி நகர சபை பிரிவிலுள்ள பொது மக்கள் இலகுவாக தொடர்பு கொள்ளக் கூடிய வகையில் இந்த திண்மக்கழிவு முகாமைத்துவ செயலணி அமைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இந்த செயலணியில் ஆறு பேர் கொண்ட உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

காத்தான்குடி நகர சபை பிரிவிலுள்ள பொது மக்கள் திண்மக்கழிவுகள் தொடர்பில் முறைப்பாடுகளை 0654929394 எனும் தொலை பேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு தெரிவிக்க முடியும் எனவும் அவர் மேலும் கூறினார்.

வீட்டில் சேரும் திண்மக்கழிவுகளை வீதிகளிலும் பொது இடங்களிலும் வீசாமல் காத்தான்குடி நகர சபையின் திண் மக்கழிவகற்றல் வாகனம் வருகின்ற போது அவற்றுக்கு அதை உக்காத கழிவு உக்கும் கழிவு என தரம் பிரித்துக் கொடுப்பதுடன் குறிப்பிட்ட தினத்தில் காத்தான்குடி நகர சபையின் திண் மக்கழிவகற்றல் வாகனம் வராவிடில் மேற்படி தொலை பேசி இலக்கத்திற்கு அறிவிக்க முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

வீட்டில் சேரும் திண்மக்கழிவுகளை வீதிகளிலும் பொது இடங்களிலும் வீசுவதால் நமது சுற்றப்புறச் சூழல் மாசடைவதுடன் டெங்கு போன்ற பல்வேறு நோய்த்தாக்கங்களும் ஏற்பட வாய்ப்புண்டு எனவும் அதனால் இது விடயத்தில் பொது மக்கள் விழிப்புடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY