ரயில் இன்ஜின் மோதியதில் ஒருவர் பலி; திருமலையில் சம்பவம்

0
87

(அப்துல்சலாம் யாசீம்)

திருகோணமலையிலிருந்து கன்தளாய் நோக்கி பயணித்த ரயில் இன்ஜின் மோதியதில் இலிங்க நகர் பகுதியைச்சேர்ந்த நபரொருவர் நேற்று மாலை (30) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் திருகோணமலை இலிங்கநகர் திருச்செல்வம் வீதியைச்சேர்ந்த ராமலிங்கம் கலைவன் (44வயது) எனவும் தெரியவருகின்றது.

குறித்த நபர் ரயில் வீதியினூடாக நடந்து சென்று கொண்டிருந்த போது பாலையூற்று பகுதியில் ரயில் இன்ஜின் மோதியதாகவும் அவ்விடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் தெரியவருகின்றது.

உயிரிழந்தவரின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விசாரணைகளை தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY