கிண்ணியாவில் பொது சுகாதாரங்களை மேம்படுத்துவதன் ஊடாக கிண்ணியாவை அழகுபடுத்தலாம் என்.எம்.நௌபீஸ்

0
258

(ஹஸ்பர் ஏ ஹலீம்)

கிண்ணியாவில் சுகாதார வசதிகளை மேம்படுத்துவதன் ஊடாக நோயற்ற அழகான கிண்ணியாவை எதிர்காலத்தில் எம்மால் உருவாக்க முடியும் என கிண்ணியா நகர சபையின் செயலாளர் என்.எம்.நௌபீஸ் தெரிவித்தார்.

2018 ஆம் ஆண்டிலிருந்து பொது மக்களின் சுகாதார நலனை மேம்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் நேற்று(29) கிண்ணியா நகரசபையின் விசேட ஆணையாளரும், செயலாளருமான என். எம். நௌபீஸின் அழைப்பின் பேரில் கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ஏ.எம்.எம். அஜித், ஆகியோரிக்கிடையிலான கலந்துரையாடலானது கிண்ணியா நகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன் போது பல முக்கிய சுகாதார விடயம் தொடர்பான பல முக்கிய தீர்மாணங்களின் முடிவுகள் ஜனவரியின் ஆரம்பத்தில் இருந்து அமுல்படுத்தப்படவுள்ளதாக தீர்மானங்கள் எட்டப்பட்டன.

. 2018 இல் உணவு விற்பனையோடு சம்மந்தப்பட்ட சகல வியாபார நிலையங்களையும் வருமானப் வரிப் பரிசோதகர்கள் மற்றும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் பார்வையிட்டு அங்கிகரித்ததன் பின்னரே வியாபார உத்தரவுப் பத்திரம் வழங்குதல்,
அவ்வாறு முறையற்றதாக காணப்படும் வியாபார நிலையங்களுக்கு கால அவகாசம் வழங்கி திருத்தச் செய்தல்,

அதனை மீறுவோருக்கெதிராக அவர்களது வியாபார உத்தரப் பத்திரத்தை இரத்துச் செய்து சட்ட நடவடிக்கை எடுத்தல்,

உணவு தயாரித்தல் மற்றும் விநியோகித்தலோடு சம்மந்தப்பட்டவர்களை மருத்துவப் பரிசீலனை செய்தல்,

புதிதாக கடைகள் அமைக்கும் போதோ, அல்லது கடைகள் திருத்தும் போதோ போதிய சுகாதார வசதியுடன் அமைப்பதை உறுதிப்படுத்தல்,

மேலுள்ள விடயங்கள் தொடர்பாக கடை உரிமையாளர்களுடன்நகரசபையும், பொதுச் சுகாதார பணிமனையும் இணைந்து விழிப்புணர்வு கருத்தரங்கு ஒன்றை நடாத்துதல்,
மட்டக்களப்பு பிரதான வீதியில் அமைந்துள்ள வியாபார நிலையங்களின் சுகாதார நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கேற்ப அது தொடர்பாக சுற்றாடல் திணைக்களம் மற்றும் CCD ஆகியவற்றுடன் கலந்துரையாடி தீர்மானம் எடுத்தல்,

பொதுமக்கள் தமது சொந்த இடங்களில் அறுக்க அனுமதி கோரும் கால்நடைகளின் வயது, தன்மை, சுகாதாரம் என்பவற்றை உறிப்படுத்தல்,

மேலும் கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்துடன் கலந்துரையாடல் மேற்கொண்டு கால் நடை வைத்தியரின் சான்றிதழைப் பெறுவதற்கும் அதனை விரைவு படுத்தவும் நடவடிக்கை எடுத்தல்,

தொற்றும் நோய்கள் பரவுவதைத் தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளல்,
டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த நகரசபையும், பொதுச் சுகாதாரப் பணிமணையும் இணைந்து செயற்படல்

, டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தும் அடிப்படையில் 02.01.2018 இலிருந்து விசேட வேலைத்திட்டம் ஒன்றினை முன்னெடுத்தல்

போன்ற பல பொதுச் சுகாதார மேம்பாடுகளை கிண்ணியா நகர சபைக்குட்பட்ட பகுதிகளில் நடைமுறைப்படுத்துவதன் ஊடாக மக்களுக்கான ஆரோக்கியமான நோயற்ற சுத்தமான பிரதேசமாக மாற்றுவதே இத்திட்டத்தின் நோக்கங்களாகும் எனவும் கிண்ணியா நகர சபையின் செயலாளர் என்.எம்.நௌபீஸ் இதன்போது மேலும் தெரிவித்தார்.இக்கலந்துரையாடலில் சுகாதார பரிசோதகர்கள்,நகர சபையின் வருமான பரிசோதகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

FB_IMG_1514578311990

LEAVE A REPLY