அய்யூப் அஸ்மின் அமைச்சர் றிஷாட்டை விமர்சிப்பதன் மூலம் தமிழ் கூட்டமைப்பிடம் எதிர்பார்ப்பது என்ன?

0
198

(எம்.எம்.மஜீத்)

கடந்த வாரம் யாழில் இடம்பெற்ற தேசிய மீலாத் விழாவில் அமைச்சர் றிஷாட் அரசியல்ப் பேசி விட்டார் என புலம்பித்திரிகின்றார் அய்யூப் அஸ்மின். யாழ் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தில் அரச அதிகாரிகளின் அசமந்தப்போக்கும் அதற்காக ஒதுக்கப்பட்ட நிதி திரைசேரிக்கு அனுப்பப்படுவதையும் வேதனையோடு நினைவு கூர்ந்த அமைச்சர் றிஷாட் பதியுதீன், தற்போது யாழில் குடியேறியுள்ள மக்களுக்குரிய வீடுகளை அமைக்க 2018 இல் நிதியை வழங்க தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.

யாழ் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்துக்கான காணிப்பிரச்சினைகளை தீர்க்க தமிழ்த் தலைமைகளுக்கு சபாநாயகர், முஸ்லிம் அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் இருந்த கூட்டத்தில் அமைச்சர் றிஷாட் பகிரங்க அழைப்புவிடுத்ததை பிழை என்று விமர்சித்திருப்பது அய்யூப் அஸ்மின் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்துக்கு எதிரானவர் என்பதை நிரூபனமாகிவிட்டது.

யார் இந்த அய்யூப் அஸ்மின்,
தனக்கு இனாமாகக் கிடைத்த பதவியை வைத்து முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்துக்கு எதிராக செயற்படும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு நன்றாகவே வக்காலத்து வாங்குகின்றார்.

அஸ்மின் கூறியிருக்கும் கருத்து அமைச்சர் றிஷாட் பதியுதீன் அரசியல் வியாபாரத்துக்காக இனவாத்ததைத் தூண்டி தமிழ் தேசியக் கூட்டமைப்பை விமர்சிப்பதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்தில் எந்தத் தடையும் செய்யவில்லை என்று அப்பட்டமான பொய்யைக் கூறியுள்ளார்.

முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை தமிழ் தேசியக்கூட்டமைப்பு எங்கெல்லாம் தடுத்தார்கள் என்று அய்யூப் அஸ்மினுக்கு தெரியாது போல் நடிக்கின்றாரா? அல்லது தமிழ் தேசியக்கூட்டமைப்பிடம் ஏதாவது பெறுவதற்காக இவ்வாறு பொய் பேசுகின்றாரா என்று தெரியவில்லை
வவுனியா சாளம்பைக்குளம் மக்களின் மீள்குடியேற்றத்துக்கு சொல்லொனாத் துன்பங்களையும் அநியாயங்களையும் செய்தவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரே.

முல்லைத்தீவில் 27 வருடமாக அகதிகளாக இருந்த மக்கள் தங்களது சொந்த பூமிக்கு மீளக்குடியமரச் செல்லும் போது அதற்கு எதிராக தமிழ் மக்களை திரட்டி இனவாதத்தை தூண்டியவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பே இன்றும் அந்த மக்கள் அகதி வாழ்வு வாழ்கின்றார்களே இதற்கு யார் காரணம்?

மன்னார் சன்னாரில் முஸ்லிம்கள் தங்களது பூர்வீக பூமியில் குடியேறும்போது அதற்கும் எதிர்ப்பை வெளியிட்டு தமிழ் மக்களை பிழையாக வழிநடாத்தியவர்களும் தமிழ் தேசியக் கூட்டமைப்பே.

முசலியில் மீள்குடியேறிய மக்கள் தொழில் இன்றி பல்வேறு துன்பங்களை அனுபவித்து வந்த போது அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்த அமைச்சர் றிஷாட் பதியுதீன் கைத்தொழில் அமைச்சின் மூலம் பல்லாயிரம் பேருக்கு தொழில் கிடைக்கும் வகையில் கைத்தொழில் பேட்டையை அமைக்க நடவடிக்கை எடுத்த போது அதனை தடுத்ததும் தமிழ் தேசியக் கூட்டமைப்பே.

வவுனியாவில் இந்தியன் வீட்டுத்திட்டத்தில் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டதற்கு அமைச்சர் றிஷாட் தமிழர்களுக்கு வந்த வீடுகளை முஸ்லிம்களுக்கு வழங்கிவிட்டார் என வவுனியாவிலும், செட்டிகுளத்திலும் அமைச்சர் றிஷாதின் கொடும்பாவியை எரித்து இந்தியன் உயர்ஸ்தானிகத்துக்கும் பிழையான தகவல்களை வழங்கியவர்களும் தமிழ் தேசியக் கூட்டமைப்பே.

தமிழ் மக்களுக்கு எந்த தவறும் செய்யாத முஸ்லிம் மக்களுக்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பு செய்த கொடுமை எண்ணிலடங்காதவை.

இவற்றை எல்லாம் தட்டிக்கேட்க வக்கற்ற முஸ்லிம் தலைமைகளில் அமைச்சர் றிஷாட் மாத்திரமே தைரியமாக பேசி இன்றுவரை முஸ்லிம்களின் அபிலாஷைகளையும் உரிமைகளையும் பெற்றுக்கொடுத்து இன்றும் போராடிக்கொண்டிருப்பவரும் என்பதே நிதர்தனம்.

இவ்வளவு கொடுமைகளை செய்தபோது நீங்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மாகாணசபை உறுப்பினராக வாய் மூடி மௌனியாக இருந்தீர்களே? இதை தட்டிக்கேட்க வக்கற்ற நீங்கள் அமைச்சர் றிஷாட் மீது விரல் நீட்டுவது கேவலமானதும் வெட்கக்கேடானதுமாகும்.

நீங்கள் மாகாணசபை உறுப்பினராக இருந்து முஸ்லிம்களுக்கு பெற்றுக்கொடுத்த உரிமைகள் என்ன? நீங்கள் செய்த அபிவிருத்தி என்ன பகிரங்கமாக வெளியிட உங்களுக்கு தைரியம் இருக்கிறதா?

உங்களுக்கு அமானிதமாக வழங்கப்பட்ட மாகாணசபை உறுப்பினர் பதவியை உங்களது கட்சி திருப்பி கேட்கும் போது வழங்க மறுத்த நீங்கள் ஒரு உண்மையான ஆலிமா? முஸ்லிம் சமூகம் பற்றிப் பேச உங்களுக்கு எந்த அருகதையும் இல்லை. கட்சி திருப்பி கேட்கும் போது பதவியை திருப்பி தருவேன் என்று வாக்குறுதியளித்த நீங்கள் செய்தது துரோகமில்லையா?

அமைச்சர் றிஷாட் யாழ் முஸ்லிம்களின் வீடுகளை கட்ட உரிய காணிகளை வழங்கவில்லை என்றும் அதற்காக ஒதுக்கிய நிதி மீண்டும் திரைசேரிக்கு அனுப்பப்படுவதை வேதனையோடு குறிப்பிட்டது உங்களது பார்வையில் இனவாதமா? அமைச்சர் றிஷாட் பேசியது அவரது சொந்தப்பிரச்சினைக்காக அல்ல வடக்கு முஸ்லிம்களின் சுதந்திரமான மீள்குடியேற்றத்துக்கே என்பதை முஸ்லிம்கள் புரிந்து விட்டார்கள்.

அஸ்மின் நீங்கள்தான் தேர்தலை முன்னிட்டு அரசியல் வியாபாரம் செய்ய ஆரம்பித்துள்ளீர்கள் என்பது வெட்ட வெளிச்சமாகிவிட்டது.

LEAVE A REPLY