இன்று சுனாமி வந்தால்….?

0
604

(Mohamed Nizous)

அன்று வந்த சுனாமி போல
இன்றும் ஒரு சுனாமி வந்தால்..?
முக நூல் ஜீவ ராசிகளை
முன்னிறுத்தி எழுதுகிறேன்

எழும்பி வரும் அலை முன்னே
இருந்து ஷெல்பி பிடிக்க என
கிளம்பிப் போவார்கள்
கிறுக்கன்கள் சில பேர்கள்

அலை வருதாம் பிரண்ட்ஸ்
ஆஹா பீலிங் எக்ஸைற்மண்ட்
மள மளணணு பீலிங்கள்
மழையாகக் கொட்டி நிற்கும்

வடிவேலு படம் போட்டு
வாடா வாடா பார்க்கலாம் என
இடையிலே ஒரு கூட்டம்
இயற்கைக்கு சவால் விடும்

உதவி கேட்டு ஒருத்தன் அழ
ஓடிப் போய்த் தூக்காமல்
அதை பிடித்து fb போட்டு
அவசரமாய்ப் பகிரச் சொல்வார்

ஓட்டமாய் ஓடிச் சென்று
உயர இடம் ஏறு முன்னே
டேட்டாவை ஓன் பண்ணி
லேட்டஸ்ட் போஸ்ட் பார்ப்பார்.

வட்டார வேட்பாளர்
வாய்ப்பைப் பயன் படுத்தி
அகதிகள் முன் நின்று
அவசரமாய் லைவ் கொடுப்பார்

முக நூலில் தீர்ப்பு சொல்லும்
முப்திகள் ஆங்காங்கு
அலை வந்த பிரதேசங்கள்
அனாச்சாரம் அதிகம் என்பார்

என்றாலும் பெருங் கூட்டம்
அன்றும் இன்றும் என்றும்
சென்று அங்கு உதவி செய்யும்
தொண்டு செய்யும் தூங்காது

அன்று சுனாமியிலே
ஆன அந்தப் பயங்கரங்கள்
இன்னும் வராதிருக்க
இறைவனைப் பிரார்த்திப்போம்

LEAVE A REPLY