இளைஞர்களே இன்றைய தலைவர்கள்

0
140

(ஹஸ்பர் ஏ ஹலீம்)

சமாதானத்திற்கான சர்வதேச இளைஞர்களின் கூட்டமைப்பானது (IYAP) வெற்றிகரமாக தனது 4ஆவது வருடத்தை பூர்த்தி செய்த இளைஞர் தலைமையிலான அமைப்பாகும்.

நான்காவது வருடத்தை நினைவுபடுத்தும் நோக்கில் ஐலுயுP கடந்து வந்த பாதையில் அதன் முக்கியமான சில தருணங்களையும் அதன் சாதனைகளையும் இங்கு பகிர்ந்து கொள்கின்றேன்.

பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் மரியாதையுடைய உலகினை கட்டியெழுப்புதலே எம்முடைய நோக்காக இருந்தது. எமது இந் நோக்கம் எம்முடனும் எமது குடும்பத்துடனும் ஆரம்பித்துள்ளது எனலாம். சமூகத்தின் நிலையான அபிவிருத்தியை உருவாக்கும் நோக்கில் செயற்படும் இளைஞர்கள் மத்தியில் ஒரு வலையமைப்பை கட்டியெழுப்பும் முயற்சியில்; செயற்படும் எமது இந் நோக்கத்திற்கு எப்பொழுதும் எல்லைகள் கிடையாது.

தலைவர், பணிப்பாளர்கள், பணிப்பிரிவு, தேசிய ஆலோசனைக் குழு, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் தன்னார்வத் தொண்டர்கள் என்ற ஒழுங்குபடுத்தப்பட்ட கட்டமைப்பை கொண்டதாக இது காணப்படுகின்றது. எதிர்காலத் திட்டங்கள், கருத்துக்கள் மற்றும் எண்ணங்கள் போன்றவற்றை சமமாக பகிர்ந்து கொள்வதற்கான தளமொன்றினையும் இது வழங்கியுள்ளது. இவ்வாறானதொரு பிணைப்பே ஐலுயுP குடும்பம் வெற்றிபெற காரணமாயிற்று.

ஐலுயுP ஆனது இளைஞர்களை ஊக்குவித்தல் மற்றும் எதிர்காலத்தில் ஒரு சிறந்த வலையமைப்பை கட்டியெழுப்பல் மாத்திரமின்றி மாற்றம் மற்றும் அபிவிருத்திக்காக எதிர்பார்த்திருக்கும் உலகிற்கு அவ் வலையமைப்பின் மூலம் இளைஞர்களை வழிகாட்டி தமது கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புக்களையும் சந்தர்ப்பங்களையும் வழங்குவதற்கானதொரு தளத்தையும் ஏற்படுத்துகின்றது.

இளைஞர் தலைமைத்துவ அபிவிருத்தி, பால்நிலை சமத்துவம், சூழல் நிலைத்தன்மை, காலநிலை மாற்றம், பால்நிலை மற்றும் இனப்பெருக்க சுகாதார மற்றும் உரிமைகள், ஊனமுற்றோரின் உரிமைகள், மனநல சுகாதாரம், சமூக குணப்படுத்தல் மற்றும் மீள்நல்லிணக்கம், இளைஞர்களின் அரசியல் பங்குபற்றல், மனித உரிமைகள், மொழி உரிமைகள், அகதிகளின் உரிமைகள், சிறுவர் உரிமைகள், டுபுடீவுஞ, மதங்களுக்குள் மற்றும் மதங்களுக்கிடையிலான நல்லிணக்கம் போன்ற சமூகத்தின் பல்தரப்பட்ட விடயங்கள் தொடர்பில் ஐலுயுP செயற்படுகின்றது.

உறுதியான கலாசாரங்களை பின்பற்றும் இச் சமூகத்தில் கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கான சுதந்திரம் வெறும் கலந்துரையாடல் மட்டத்திற்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அவ் வரம்பை மீறுவது சிக்கலானதாகவும், கடினமானதுமாக உள்ளது. இதனை தொடர்வது ஐலுயுP குடும்பத்திற்கும் கடினமானதொரு பணியாகும். இருப்பினும் கலந்துரையாடல்கள் மாத்திரமின்றி அத்தலைப்புக்களின் சாதக, பாதகங்களை நோக்கி இளைஞர்களை ஊக்குவித்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளல் ஐலுயுP கட்டமைப்பின் தன்மையாகும். அவ் விடயங்கள் குறித்து சமூகத்தில் நன்மை மற்றும் தீமை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி அந்நன்மையை தக்கவைத்து சமூகத்தில் தீய விளைவுகளை தடுப்பதற்கான செயற்திட்டங்களை கட்டியெழுப்புகின்றோம். சமூகத்;திலிருந்து இளைஞர்களை தலைவர்களாக ஊக்குவிக்கின்றோம்.

இக் கடின உழைப்பில் நாம் எதிர்கொண்ட சவால்கள் அளப்பரியவை. கடந்து வந்த பாதையில் பல தடைகள் இருந்தன அவை எம்மை மேலும் பலப்படுத்தியதுடன் பல விடயங்களையும் அதன் மூலம் பயின்றுள்ளோம். IYAP இல் வயதாலோ இனத்தாலோ பெரியவர்கள் என எவரும் கிடையாது. ஒவ்வொருவரும் தமது அனுபவம் கருத்துக்கள் மூலம் முன்னேறிச் செல்கின்றனர். இவ் உலகில் யாரும் பூரணமானவர்கள் அல்ல நாங்களும் அவ்வாறே. IYAP இன்னும் வளர்ந்து வரும் குழந்தையைப் போல என்றாலும் கீழே விழுந்தாலும் எதிரிலுள்ள தடைகளை தாண்டி மேல் எழுந்து நடக்கும். இதேபோல் இன்னும் பல விடயங்கள் உள்ளன என்றாலும் இறுதியாக IYAP குடும்பத்தின் தலைவர் மற்றும் வழிகாட்டி திருக்குமார் பிரேமகுமார் அவர்கள் குறிப்பிடும் ஒரு கருத்தை குறிப்பிட்டு நிறைவு செய்துகொள்கின்றேன்.

‘நீ நீயாக இருப்பதற்கு ஒருநாளும் பயப்படாதே. உன்னிடம் இருப்பதை பகிர்ந்துக்கொள் என்றாலும் வெளியே ஒரு உலகம் உள்ளது அதிலே பல வாய்ப்புக்கள் நிறைந்துள்ளது நினைவில் வைத்துக்கொள்…’
காயத்ரி கொடிகார

23376286_1172230292912093_3537277602283486666_n

LEAVE A REPLY