நிந்தவூரை பசுமை நகராக்கும் “பசுமை நடை” திட்டத்திற்கமைய 1000 மரக்கன்றுகளை நடுவதற்கான தொடக்க நிகழ்வு

0
126

(Mursith Mohammathu)

த மாஸ் பவுண்டேஷனின் சமூக மற்றும் சுற்றுச்சூழல் அபிவிருத்தி எண்ணக்கருக்களுக்கு அமைவாக எம்.எஸ்.ஆர் லங்கா குழுமத்துடன் இணைந்து நிந்தவூரை பசுமை நகராக்கும் முயற்சியின் “பசுமை நடை” திட்டத்தின் 1000 மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வளர்த்தெடுக்கும் முயற்சியின் முதற்கட்ட தொடக்க நிகழ்வு இன்று (24) காலை நிந்தவூர் பொது மைதானம் மற்றும் சந்தைப்பகுதியை அண்டிய பகுதிகளில் இடம்பெற்றது.

இன்நிகழ்வினை த மாஸ் பவுண்டேஷனின் தவிசாளர், முன்னாள் நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளருமான அல்ஹாஜ் ஏ.எம் தாஹிர் (அஷ்ரப்) அவர்கள் தலைமை தாங்கியதோடு எம்.எஸ்.ஆர் லங்காவின் பிரதிநிதியும் விவசாயப் போதனா ஆசிரியருமான முர்ஷிதா மற்றும் மூத்த சூழலியலாளர் இப்னு சூட் ஆகியோர் சிறப்பதிதிகளாக கலந்து கொண்டதோடு மூத்த ஊடகவியலாளர் சஹாப்தீன் மற்றும் சமூக செயற்பாட்டாளர் அஸ்பர் ஜே.பி மற்றும் பசுமை நடை திட்ட இணைப்பாளர் முர்சித் ஆகியோர் அதிதிகளாகவும் கலந்து சிறப்பித்தனர்.

நிந்தவூரை பசுமை நகராக மாற்றுவதற்கான அனைத்து வித முயற்சிகளிலும் த மாஸ் பவுண்டேஷனுடன் இணைந்து செய்படுவதற்கான அழைப்பை பசுமை விரும்பிகளுக்கு தவிசாளரால் விடுக்கப்பட்டதோடு தொடர்ந்தும் த மாஸ் பவுண்டேஷனுடன் இணைந்து நிந்தவூரை பசுமை நகராக்கும் திட்டத்தில் இயங்குவதற்கான விருப்பத்தினையும் நிகழ்வில் கலந்து கொண்ட சூழலிலியலாளர்கள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

IMG-20171224-WA0041 (1)

LEAVE A REPLY