அட்டாளைச்சேனை-மின்ஹாஜ் வட்டாரத்தை வெற்றிகொள்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம்

0
123

(பைஷல் இஸ்மாயில்)

எதிர்வரும் உள்ளுராட்­சி மன்றத் தேர்தலில் அட்டாளைச்சேனை பிரதேச சபைக்காக பாலமுனை மின்ஹாஜ் வட்டாரத்தில் ஐக்கிய­ மக்கள் கூட்டமைப்பின்­ சார்பில் அகில இலங்கை­ மக்கள் காங்கிரஸ் கட்சியில் போட்டியிடும் வேட்பாளரை வெற்றிபெற வைக்கும் ஆலோசனைக் கூட்டம் இன்றிரவு (24) சின்னப் பாலமுனை காரியாலயத்தில் எச்.எம்.சிறாஜ் தலைமையில் இடம்பெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அட்டாளைச்சேனை பிரதேச­ சபையின் முன்னாள் தவி­சாளரும், தலைமை வே­ட்பாளரும் சட்டத்தரணியுமான எம்.ஏ.அன்சில் உள்ளிட்ட கட்சியின் இளைஞர்கள் பலர் இதில் கலந்துகொண்டு தங்களின் தேர்தல் தொர்பான கருத்துக்களை முன்வைத்தனர்.

அட்டாளைச்சேனை பிரதேச­ சபையின் முன்னாள் தவி­சாளரும், தலைமை வே­ட்பாளரும் சட்டத்தரணியுமான எம்.ஏ.அன்சில் இதன்போது கருத்து தெரிவிக்கையில்,

தேர்தல் செயற்பாடுகளில் ஈடுபடுகின்ற அனைத்து இளைஞர்களும் யாரையும் யாரும் தாக்காமலும், எமது கட்சியின் கொள்கைகளையும், எதிர்காலத் திட்டங்களையும் மக்களுக்கு தெளிவுபடுத்தி முன்வைத்து செல்கின்றவர்களாக நாம் ஈடுபடவேண்டுமே தவிற ஏனைய கட்சிகளின் ஆதரவாளர்களை தாக்குகின்றவர்களாக நாம் இருக்கக்கூடாது என்று சின்னப்பாலமுனை இளைஞர்களுக்கு ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் இன்றைய கலந்துரையாடலின்போது முன்வைத்தார்.

20171224_202837

LEAVE A REPLY