சுகாதார ஊழியர்களின் நீன்டகால குறையை நீக்கிய செயலாளர் பிர்னாஸ் இஸ்மாயில்

0
119

(ஏறாவூர் ஏ.ஜீ.முஹம்மட் இர்பான்)

ஏறாவூர் நகர சபைக்குச் சொந்தமான திண்மக்கழிவு முகாமைத்துவ பிரிவில் மலசல கூடம் இல்லாமையினால் அங்கு கடமையாற்றுகின்ற சுகாதார ஊழியர்கள் பெறும் அசௌகரியங்களை கடந்த பல மாதங்களாக எதிர்கொண்டு வந்தனர்.

இது தொடர்பில், ஏறாவூர் நகர சபையின் செயலாளரும் விசேட ஆணையாளருமான பிர்னாஸ் இஸ்மாயிலின் கவனத்திற்கு கடந்த வாரம் சுகாதார ஊழியர்களினால் கொண்டு வரப்பட்டது.

அவர்களின் நன்மை கருதி கவனத்திற்கொண்ட செயலாளர், அவர்களுக்கான மல சல கூடங்களை அமைப்பதற்கான உடனடி நடவடிக்கையினை மேற்கொள்ளவேண்டும் என்ற பணிப்புரையினை அதுதொடர்பான உத்தியோகத்தர்களுக்கு வழங்கி வைத்தார்.

அதற்கமைவாக, இடம்பெற்று வருகின்ற மலசல கூடம் அமைக்கும் வேலைகளை இன்று (24) மேற்பார்வையிடுவதற்காக நேரடி விஜயத்தை மேற்கொண்டு பார்வையிட்டமையும் குறிப்பிடத்தக்கது.

44

LEAVE A REPLY