யார் தலைவன்?

0
379

(ஜெமீல் அகமட்)

அன்று மஹிந்தயா? மைத்திரியா? என்ற முடிவில் இருந்த முஸ்லிம் சமுதாயம் மைத்திரியை ஆதரித்து இந்த நாட்டின் தலைவனாக (ஜனாதிபதியாக) தெரிவு செய்த, முஸ்லிம் சமுதாயத்தின் தலைவன் யார்? என்பதை உறுதிப்படுத்தும் சந்தர்பத்தை இறைவன் கொடுத்துள்ளான். அதன் பெறு பேறுகளை எதிர் வரும் தேர்தலில் மக்கள் தெளிவுபடுத்தவுள்ளனர்.

அஸ்ரப் அவர்களின் மறைவுக்கு பிறகு முஸ்லிம் சமுதாயம் நாட்டில் பல இன்னல்களுக்கு முகம் கொடுக்க வேண்டியவர்களாக இருந்த போது அவைகளை தட்டிக்கேட்கும் உரிமை அன்று முஸ்லிம்களின் அதிக ஆதரவை கொண்ட முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கும் அதன் தலைவருக்குமே கடமையாக இருந்தாலும் ஹக்கிம் அவர்களின் அரசியல் நகர்வுகள் முஸ்லிம்கள் பற்றி பேச முடியாத சூழ்நிலையில் இருந்தது. அதனால் பல வருடம் பொறுமையாக இருந்த சமுதாயம் இன்று முஸ்லிம் காங்கிரஸ் கட்சியையும் அதன் தலைவரையும் ஒரக்கண்ணால் பார்க்க வேண்டிய சூழ் நிலை உருவாகி விட்டது அதனால் எதிர்வரும் தேர்தலில் ஹக்கிமா? அல்லது சமுதாய, அரசியல் செய்யும் றிசாத் அவர்களா? என்ற முடிவை மக்கள் எடுத்து வாக்கு அளிக்கவேண்டிய நிலை உருவாகி விட்டது.

கடந்த ஆட்சியில் நடந்தேறிய கொடுமைகள் நல்லாச்சியிலும் நடைபெற்ற போதும் அவைகளை ஹக்கிம் அவர்கள் தனது உயிர் நன்பனாகிய பிரதமர் ரனிலிடம் வாய் திறந்து காரசாரமாக பேசவில்லை காரணம் மில்லியன்கள் வாயை மூடி விட்டது ஆனால் அமைச்சர் றிசாத் மிகவும் துணிவுடன் பாராளுமன்றத்தில் பேசியுள்ளார் அத்தோடு இலங்கையில் எந்த பகுதியில் கலவரம் ஏற்பட்டாலும் ஜாதி பேதமின்றி கால நேரம் பார்க்காமல் விரைந்து சென்று மக்களை பாதுகாக்கும் ஒரு முஸ்லிம் அரசியல்வாதியாக இன்று நாட்டு மக்கள் பேசும் ஒரு மக்கள் பிரதிநிதி என்றால் அது அமைச்சர் றிசாத் என்று தான் கூற வேண்டும்.

அன்மையில் கீந்தோட்டயில் நடைபெற்ற சம்பவத்தை அறிந்து அன்று இரவு உடனே சம்பவ இடத்துக்கு விரைந்து கலவரத்தை தடுத்து மக்கள் சொத்துக்களையும் உயிர் சேதத்தையும் தடுத்து நிறுத்தினார் அதற்காக கீந்தோட்ட சிங்கள முஸ்லிம் மக்கள் அமைச்சர் றிசாத் அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர் ஆனால் முஸ்லிம்களின் தலைவன் என்று மேடையில் கதைகள் சொல்லும் ஹக்கிமால் கலவரம் முடிந்த மறுநாள் தான் கீந்தோட்ட பக்கம் போக முடிந்தது அதனால் முஸ்லிம் சமுதாயம் முஸ்லிம் காங்கிரஸ் தலைமை ஒரு போலி தலைமை அதனால் சமுதாயத்துக்கு இனிமேல் எந்த பலனும் இல்லை என்பதை உணர்ந்த மக்கள் அமைச்சர் றிசாத் அவர்களை தேசிய தலைவராக ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலைக்கு வந்து விட்டனர் என்ற உண்மை புரிகிறது அதற்காக எதிர்வரும் தேர்தலில் இந்த நாட்டின் அரசியல்வாதிகளுக்கும் மக்களுக்கும் முஸ்லிம் சமுதாயம் எடுத்துக் கூற தேர்தலை எதிர்பார்த்துள்ளனர்.

இந்த நாட்டில் எந்த பகுதியில் முஸ்லிம்கள் வாழ்ந்தாலும் அவர்களுக்கு தூணையாக இருந்து அவர்களை பாதுகாக்கும் வல்லமை கொண்ட மக்கள் அம்பாறை மாவட்ட மக்கள் அவர்களே முஸ்லிம்களின் முதுகெலும்பு என்று கூற வேண்டும் அப்படி ஒரு நிலையில் இருக்கும் மாவட்டத்தில் அரசியல் அதிகாரம் என்பது முஸ்லிம்கள் வசம் இருக்க வேண்டும் என்பது மறைந்த தலைவர் அஸ்ரப் அவர்கள் கண்டறிந்த உண்மை அதனால்தான் அம்பாறை மாவட்டத்தில் இருந்து முஸ்லிம் சமுதாயத்தின் காவலனாக முஸ்லிம் காங்கிரஸ் என்னும் மரம் வளர்ந்தது அந்த மரத்தின் கணிகளை சமுதாயம் சுவைத்த காலம் தலைவர் அஸ்ரப் அவர்களின் மறைவோடு மறைந்து விட்டது என்பதை யானைக்கு வாக்களிக்க மக்களை நிர்ப்பந்திக்கும் போது அறிந்து கொள்ள முடிகிறது.

அம்பாறை மாவட்டத்தில் அரசியல் அதிகாரம் நிலை நிறுத்த மக்கள் முஸ்லிம் காங்கிரஸின் சின்னமான மரத்துக்கு தேர்தலில் வாக்கு புள்ளடியிட ஆவலாக இருக்கும் போது யானை சின்னத்துக்கு வாக்கு புள்ளடியிட்டு ஐக்கிய தேசிய கட்சியை அலங்கரிக்க ஹக்கிம் மக்களை பொய் வாக்குறுதியளித்து ஏமாற்றும் நாடகம் தொடர்வதால் அதை தடுத்து சமுதாயத்தின் நலனுக்காக அம்பாறை மக்கள் இன்றைய அரசியலில் புதுயுகம் படைக்க அஸ்ரப் அவர்களின் அரசியல் சிந்தனையில் பயனிக்கும் அமைச்சர் றிசாத் அவர்களுக்கு எதிர் வரும் தேர்தலில் ஆதரவு வழங்கி அவரை தேசிய தலைவராக ஏற்றுக்கொள்ள இருப்பது தப்பு இல்லை.

அதாவது மரம் வளர்ந்த அம்பாறை மண்ணில் மரச்சின்னத்தில் தேர்தல் கேட்க முடியாது என்றால் வன்னியில் வளர்ந்த மயில் சமுதாயத்தின் நலனுக்காக கடந்த தேர்தலில் (2015) அம்பாறைக்கு பறந்து வந்து தனிமையில் தேர்தல் களத்தில் பறந்தது அதுபோல் எதிர் வரும் தேர்தலில் தனித்து மயில் களமிறங்கி சமுதாயத்தை பாதுகாக்க முன் வந்து இருக்கும் போது மரத்தால் ஏன் முடியாது என்று மக்கள் கேட்கும் போது மரத்தை யானைக்கு உணவாக கொடுத் விட்டோம் என்ற உண்மையை ஹக்கிம் குரூப் சொல்ல தயங்கினாலும் தலைவர் அஸ்ரப் அவர்களின் மரணத்தோடு மரமும் மரணித்து விட்டது என்ற உண்மையை மக்கள் அறிந்து கொண்டு அம்பாறையில் எவரின் உதவியுமின்றி தனித்து பறக்கும் மயிலின் அடையாளம் கொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியை முஸ்லிம் சமுதாயம் ஆதரித்து அதன் தலைவர் அமைச்சர் றிசாத் அவர்களை தேசிய தலைவராக ஏற்றுக்கொள்ளும் தேர்தலாகவே எதிர் வரும் தேர்தல் முடிவுகள் அம்பாறையில் அமையும் அதன் பின் சமுதாயம் நிம்மதியடைந்து சுதந்திர காற்றை சுவாசிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

LEAVE A REPLY