உள்ளுராட்சி மன்ற தேர்தலில் NFGG யில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான தேசிய மாநாடு நாடு

0
229

DSC03310(விஷேட நிருபர்)

உள்ளுராட்சி மன்ற தேர்தலில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான தேசிய மாநாடு காத்தான்குடி பீச்வே ஹோட்டலில் இன்று (24) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த மாநாட்டில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் எம்.எம்.அப்துர் ரஹ்மான் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பிரதி தவிசாளர் சிறாஜ் மன்சூர் தேசிய அமைப்பாளர் எம்.பி.எம்.பிர்தௌஸ் நழீமி உட்பட நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் முக்கியஸதர்கள் வேட்பாளர்கள் மற்றும் உலமாக்கள் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இதன் போது உள்ளுராட்சி மன்ற தேர்தலில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் சார்பில் வேட்பாளர்கள் நடந்து கொள்ள வேண்டிய முறைகள் மற்றும் ஒழுக்கம் அவர்களின் செயற்பாடு உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டால் நடந்து கொள்ள வேண்டிய முறைகள் தொடர்பான சத்திய உறுதியுரையும் இதன் போது எடுக்கப்பட்டன.

இதில் விஷேட உரையினை நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் எம்.எம்.அப்துர் ரஹ்மான் நிகழ்த்தினார்.

DSC03303 DSC03305 DSC03306 DSC03296

LEAVE A REPLY