தாழங்குடாவில் கிணற்றிலிருந்து பெண்ணொரவரின் சடலம் மீட்பு

0
107

(விஷேட நிருபர்)

காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள தாழங்குடாவில் கிணற்றிலிருந்து பெண்ணொரவரின் சடலமொன்று இன்று (24) ஞாயிற்றுக்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

தாழங்குடா மதுராபுரம் கிராமத்தில் வசித்து வந்த நல்லதம்பி செல்வராணி (வயது 57) என்பவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

3 பிள்ளைகளின் தாயான இவரின் சடலம் அவரது வளவிலுள்ள கிணற்றிலிருந்தே மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் மேலும் தெரித்தனர்.

குறித்த பெண்ணின் கனவர் அரச சார்பற்ற நிறுவனமொன்றின் அலுவலகத்திற்கு இரவுக் காவல் கடமைக்காக சென்றுள்ளார்.

இன்று காலையில் பிள்ளைகள் தாயை தேடிய போது தாய் கிணற்றினுள் சடலமாக கிடப்பதை கண்டுள்ளனர்.

இதையடுத்து பிரிவு கிராம உத்தியோகத்தருக்கும் பொலிசாருக்கும் அறிவிக்கப்பட்டதையடுத்து ஸ்தளத்திற்கு விரைந்த பொலிசார் சடலத்தை மீட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம் பெற்று வருவதாக காத்தான்குடி பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

DSC03293

LEAVE A REPLY