(ஹஸ்பர் ஏ ஹலீம்)
கிண்ணியா நகரசபைக்குட்பட்ட பிரதேசங்களில் டெங்கு பரவும் அபாயத்தைத் தடுக்கும் நோக்கில் கிண்ணியா நகரசபையின் செயலாளரும், விசேட ஆணையாளருமாகிய என். எம். நௌபீஸ் தலைமையில் நீர் தேங்கியுள்ள பிரதேசங்களை கண்டறிவதற்கான நகர சபை குழுவினர் நேற்று முன்தினம்(21) அன்று எகுத்தார் நகர் கரையோர பகுதிக்குச் சென்றிருந்தனர்.
அதனடிப்படையில் நீர் தேங்கியுள்ள மற்றும் நீர் வடிந்டோடுவதைத் தடுக்கும் இடங்கள், பொருட்கள் அடையாளம் காணப்பட்டதுடன் அவற்றில் டெங்கு பரவுவதைத் தடுக்கும் நோக்கில் அவை அழிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது. அத்துடன் இது சம்மந்தமாக பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டது.
மேலும் நீர் வடிந்தோடுவதைத் தடை செய்யும் வகையில் பொதுமக்களினால் தடை செய்யப்பட்ட பிரதேசங்களை உடனடியாக அகற்றுமாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதுடன், எழுத்து மூல அறிவுறுத்தல்கள் வழங்கவும் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. அத்துடன் குறித்த பிரதேசங்களில் அமைக்கப்படும் சகல கட்டுமாணங்களுக்கும் நகரசபையின் அனுமதி பெற்று மேற்கொள்ளுமாறும் இதன்போது கிண்ணியா நகர சபையின் செயலாளர் என்.எம்.நௌபீஸ் தெரிவித்தார்.நீர்வடிந்தோடும் பிரதேசத்தை தடை செய்பவர்களுக்கும் சட்டநடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் செயலாளர் தெரிவித்தார்.பொதுமக்கள் தங்களது வீட்டுச் சூழலை டெங்கு குடம்பிகள் இனப்பெருக்கம் செய்யாவண்ணம் சுத்தமாக வைத்திருக்கும் படியும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.