டொனால்ட் டின் ஜெருசலத்தினை இஸ்ரேவேலின் தலைநகரமாக எடுத்த தீா்மாணத்தினை இலங்கை வன்மையாக கண்டிக்கின்றது

0
322

(அஷ்ரப் ஏ சமத்)

இலங்கயைில் உள்ள சகல அரசியல் கட்சிகளும் நேற்று (23) அமைச்சா் ராஜித்த சேனாரத்தினா தலைமையில் கொழும்பு புதிய நகர மண்டபத்தில் ஒன்று கூடி அமேரிக்கா மற்றும் இஸ்ரேவேலுக்கு எதிரகாக கண்டனக் குரல் எழுப்பி உரையாற்றினாா்கள்.

அத்துடன் சமாதானம், சௌபாக்கியம் மற்றும் ஸ்திர தன்மைஆகியவறறுக்காக பலஸ்தீன் அரசின் தலைநகரமாக ஜெருசலத்தை ஏற்றுக் கொள்ளவும் . ஒருபோதும் அமேரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் டின் ஜெருசலத்தினை இஸ்ரேவேலின் தலைநகரமாக எடுத்த தீா்மாணத்தினை இலங்கை வன்மையாக கண்டிக்கின்றது. என தீா்மாணம் எடுத்து அறிக்கையிலும் சகல கட்சிகளின் தலைவா்கள் ,பிரநிதிகளும் ஒப்பமிட்டாா்கள்.

இந் நிகழ்வு இலங்கை -பலஸ்தீன் நட்புரவுச் சங்கத்தின் தலைவரும் அமைச்சருமான டொக்டா் ராஜித்தன மற்றும் செயலாளா் ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பிணா் விமல் ரத்நாயக்கா ஆகியோா்கள் தலைமையில் ் நடைபெற்றது.

ஸ்ரீ.ல.முஸ்லீம் காங்கரஸ் தலைவா் அமைச்சா் ரவுப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் றிசாத் பதியுத்தீன், முன்னாள் அமைச்சா் இம்திாயாஸ் பாக்கீா் மாக்காா், கட்டாா், மற்றும் ஜரோப்பிய நாடுகளின் துாதுவா்கள், பாராளுமன்ற உறுப்பிணா் வாசுதேவ நாயக்கார, கம்மினியுஸ்ட் கட்சியின் தலைவா் டியுகுணசேகர, சட்டத்தரணிகள் சங்கத் தலைவா், களனி பல்கலைக்கழக விரிவுரையாளா் அமிலத் தேரோ, தேசிய ஜக்கிய முன்னனி தலைவா் அசாத் சாலி, ஜ.தே.கட்சி சாா்பி்ல் பாராளுமன்ற உறுப்பிணா் முஜிபு ரஹ்மான். ஸ்ரீ.ல.சு.கட்சியின் அமைச்சா் பௌசியின் சாா்பில் அவரது செயலாளா். அலிசாஹிா் மொலானா், பலஸ்தீன் துாதுவா், ஹிந்து மதத் பௌத்த மதத் தலைவா்கள், ஜம்மியத்துல் உலமா சபைத் தலைவா் சாா்பில் முபாரக் மௌலவி என பல அரசியல் கட்சிகளின் ஊட கவியலாளா்கள் என்.எம்.அமீன், சன்டே டைம்ஸ் பிரதி ஆசிரியா் அமீன் இஸ்ஸடீன் மற்றம் அரசியல் பிரநிதிகள் கலந்து கொண்டு கண்டன உரையை நிகழ்த்தினாா்கள்

pal2 pal3 pal4 pal5 pal6 pal7 pal8 pal9 pal10 pal11

LEAVE A REPLY