வாக்காளப் பெருமக்கள்

0
166

Mohamed Nizous

பேஷ் புக் பார்க்காத
பெரிய கூட்டமொன்று
ஊருக்குள் இருக்குது
ஊமையாய் இருக்குது

அந்தக் கூட்டம் வந்து
அளிக்கும் வாக்குகள்தான்
எந்த ஆட்சி வருமென்று
இறுதியில் தீர்மானிக்கும்

முகநூல் போல்களில்
முண்டியடித்து வாக்களிப்போர்
பலருக்கும் இன்னும்
பதினெட்டுத் தாண்டவில்லை

கொமாண்டோ போல் fbயில்
கொமண்ட் பண்ணும் பல பேர்கள்
ஓட்டளிக்கும் தினம் துபாயில்
ஒட்டகத்தில் பால் கறப்பார்

மச்சாண்ட ராத்தாட
மகனுக்கு வாக்களிப்பார்
பச்சை நீலமெல்லாம்
பார்க்கமாட்டார் சில பேர்கள்

ஊழல் நேர்மையெல்லாம்
ஒரு கூட்டம் தான் பார்க்கும்
ஆளப் பிடிச்சிருந்தால்
அளிப்பார்கள் வாக்குகள்

தொகுதியிலே வென்றவரே
தோற்கலாம் வட்டாரத்தில்
போட்டியிடும் வட்டாரத்தில்
பார்ட்டிகளின் செல்வாக்கால்

யாருக்கும் சார்பாக
இதனை எழுதவில்லை
ஊருக்குள் இருக்கின்ற
உண்மை நிலை எழுதினேன்

LEAVE A REPLY