மருதமுனை இஸ்லாமிக் றிலீப் வீட்டுத் திட்டத்தின் கழிவு நீர் பிரச்சினைக்கு தீர்வு

0
240

(அகமட் எஸ். முகைடீன்)

மருதமுனை இஸ்லாமிக் றிலீப் வீட்டுத் திட்டத்தின் கழிவு நீர் பிரச்சினைக்கான தற்காலிக தீர்வாக 25 அடி நீள, அகலமுடைய கழிவு நீர் சேகரிப்புத் தொட்டி ஒன்றை அமைப்பதற்கான பணிப்புரை விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீஸினால் கல்முனை மாநகர சபை ஆணையாளருக்கு விடுக்கப்பட்டுள்ளது.

மருதமுனை இஸ்லாமிக் றிலீப் வீட்டுத் திட்டத்தில் அமைந்துள்ள வீடுகளின் கழிவு நீரை வெளியேற்றுவதற்குரிய திட்டம் இன்மையினால் குறித்த சுற்றுப்பிரதேசம் கழிவு நீரினால் மாசுற்று காணப்படுவதனால் பல்வேறு சுகாதார சீர்கேடுகள் நிலவி வருவது தொடர்பில் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீஸின் கவனத்திற்கு கொண்டுவந்ததனைத் தொடர்ந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி அல்ஹாஜ் எச்.எம்.எம். ஹரீஸ் குறித்த பிரதேசத்திற்கு நேற்று (22) வெள்ளிக்கிழமை நேரடி விஜயம்செய்து பார்வையிட்டு மேற்படி உத்தரவை பிறப்பித்தார்.

மேலும் குறித்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாக நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் கழிவு நீரை வெளியேற்றுவதற்கான வடிகான் திட்டமொன்றை அமைத்து தருவதாகவும் அத்தோடு குறித்த வீட்டுத்திட்டத்திற்கு அண்மித்த பிரதேசத்தில் காணப்படும் குறுக்கு வீதியினை புனரமைத்துத் தருவதாகவும் பிரிதி அமைச்சர் ஹரீஸ் இதன்போது உறுதியளித்தார்.

இவ்விஜயத்தின்போது கல்முனை மாநகர சபை ஆணையாளர் ஜே. லியாகத் அலி, கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் சட்டத்தரணி ஏ.எம். றகீப், விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர் நௌபர் ஏ. பாவா, கல்முனை மாநகர சபை தொழில்நுட்ப உத்தியோகத்தர், இஸ்லாமிக் றிலீப் வீட்டுத் திட்ட முகாமைத்துவ சபை தலைவர் எம். நாசர், செயலாளர் யு.எல். நபீர், எஸ்.எல். பௌஸ் மற்றும் பிரதேசவாசிகள் எனப் பலரும் பிரசன்னமாகியிருந்தனர்.

1 3 4 5 7 8

LEAVE A REPLY