சாய்ந்தமருதில் களமிறக்கப்பட்டுள்ள சுயேற்ச்சை வேட்பாளர்கள் ACMC யின் ஏஜெண்டுகளா.? உதுமான் கண்டு நாபீர் பகிரங்க கேள்வி.

0
311

ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்


எதிரே வருகின்ற உள்ளூராட்சி மன்றதேர்தலில் கல்முனை மாநகர நிருவாக எல்லைக்குள் உட்பட்ட முக்கிய பிரதேசமான சாய்ந்தமருது பிரதேசத்தில் உள்ள பள்ளிவாயல் நிருவாகம் சுயேற்ச்சையாக களமிறங்கியுள்ள விவகாரமும், அதனை ஓட்டிய சாய்ந்தமருதுக்கான தனியான பிரதேச சபையினை பெற்றுக்கொள்ளும் முடிவிற்கும் எல்லோரும் தலை சாய்த்தே ஆக வேண்டும்.

மறுபக்கத்திலே குறித்த முடிவிற்கு அமைவாக தேர்தல் ஒன்று அறிவிக்கப்பட்டதற்கு பிற்பாடு சாய்ந்தமருத்திலிருந்து களமிறக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரசினை பிரதி நிதித்துவப்படுத்துகின்ற வேட்பாளர்களாக இருக்கலாம் என்ற பரவலான சந்தேகமும், அதற்கான பல ஆதாரங்கள் வேளியாகி கொண்டிருப்பதினாலும் குறித்த விடயத்தில் பாரிய சந்தேகம் உள்ளதாக சமூக ஆர்வலரும் நாபீர் பெளண்டேசனின் இஸ்தாபக தலைவரும், பொறியலாளருமான உதுமான்கண்டு நாபீர் தெரிவிக்கின்றார்.

மேலும் குறித்த விடயம் சம்பந்தமாக தனது கருத்தினை தெரிவித்த உதுமான்கண்டு நாபீர்… நேரடியாக களமிறங்குவதற்கு தகுதியற்றவர்கள் பள்ளிவாயலின் ஊடாக களமிறக்கப்பட்டிருக்கின்றார்கள். இவ்வாறான வேட்பாளர்களுக்கு சாய்ந்தமருது மக்கள் வாக்களிப்பது என்பது பெரும் சந்தேகத்திற்கு இடமான விடயமாக மாறியுள்ளது. பள்ளிவாயலினால் எடுக்கப்பட்ட முடிவு சிறந்ததொரு முடிவாக பார்க்கப்பட்டாலும் கூட சுயேற்ச்சையாக தெரிவு செய்யப்பட்ட வேட்பாளர்களை அப்பிரதேசத்தில் உள்ள குழுக்கள், கட்சிகள், ஏனைய சமூக அமைபுக்கள், புத்திஜீவிகள் என கலந்தாலோசித்து தெரிவு செய்யாமல் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் முழுமையான வழிகாட்டலுன் சாய்ந்தமருது, மாளிகைகாடு பிரதேசத்திற்கு களமிறக்கப்பட்டுள்ளார்கள்.

சாய்ந்தமருத்திற்கான தனியான பிரதேச சபை என்ற விடயத்தினை கருத்தில் கொண்டு இம்முறை உள்ளூராட்சி தேர்தலில் வேட்பாளர்களை களமிறக்க இருந்த நாபீர் பெளண்டேசன் பிரதேசத்தின் நன்மையினை கருத்தில் கொண்டு தேர்தலில் இருந்து ஒதுங்கி இருக்கும் முடிவினை எடுத்திருந்தது. இந்த நிலையில் வேட்பாளர்களை சுயேற்ச்சையாக களமிறக்கி உள்ள முடிவனது குறித்த பிரதேசத்தில் உள்ள மக்களை சந்தேகத்திற்கு உள்ளாக்கியுள்ள விடயமாக மாற்றியமைத்துள்ளது. ஆகவே எதிரே வருகின்ற தேர்தலில் இவ்வாறான வேட்பாளர்களுடைய முக மூடியினை கிழிதெறிந்து மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டவுள்ளதாக குறித்த அறிக்கையில் உதுமான் கண்டு நாபீர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY