ஐ.நாவில் பலஸ்தீனுக்கு ஆதராவாக வாக்களித்த இலங்கை அரசுக்கு அமைச்சர் ரிஷாட் நன்றி தெரிவிப்பு!

0
367

-ஊடகப்பிரிவு-
கிழக்கு ஜெருசலத்தை, பலஸ்தீன் நாட்டின் தலை நகராக ஏற்றுக்கொள்ளுமாறு வலியுறுத்தி இன்று (22) கொழும்பு நகர மண்டபத்தில் இடம்பெற்ற மாநாட்டில் கலந்துகொண்டு பலஸ்தீனுக்கு ஆதராவாக வாக்களித்த அரசுக்கு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் நன்றி தெரிவித்தார்.

அமைச்சர் மேலும் கூறியதாவது,
ஜெருசலத்தை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்கா கடந்த 5ம் திகதி வெளியிட்ட அறிவிப்பை வாபஸ் பெறுமாறு நேற்று (21) ஐ.நா. பொதுச் சபையில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் இலங்கை உட்பட 128 நாடுகள் பாலஸ்தீனத்தை ஆதரித்தும், 09 நாடுகள் எதிராகவும் வாக்களித்திருந்தன. பாலஸ்தீனத்தை ஆதரித்து ஐநா பொதுச்சபையில் அமெரிக்காவுக்கு எதிராக இலங்கை வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பலஸ்தீனத்தை ஆதரித்து இலங்கை ஐநா பொதுச்சபையில் அமெரிக்காவுக்கு எதிராக வாக்களித்திருந்ததை வரவேற்பதாகவும், பாலஸ்தீனம் முஸ்லிம்களின் பூர்வீக பூமி. என்றும் அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இலங்கை அரசு ஆதரித்து வாக்களித்தமைக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்க்கிரமசிங்க ஆகியோருக்கு இலங்கை வாழ் முஸ்லிம்களின் சார்பாக தமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதாக அகில இலங்கை மக்கள் அகாங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

மேலும், பலஸ்தீன மக்களின் நலனுக்காக அனைவரும் பிரார்த்திக்குமாரு வேண்டிக்கொண்ட அமைச்சர் ரிஷாட், இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்த ஏற்பாட்டுக் குழுவினருக்கும் தமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்.
இந்த மாநாட்டில் மதத் தலைவர்கள், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் பலஸ்தீன் நாட்டின் உயரதிகாரிகள் மற்றும் புத்திஜீவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

WhatsApp Image 2017-12-22 at 7.55.59 PM 25508056_1946870275329158_4430533351695378889_n 25498334_1946870341995818_898780962908342751_n 25594104_1946870165329169_3659628253336239997_n

LEAVE A REPLY