அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் போட்டியிடும் மாவட்டங்களும், விபரங்களும்….!

0
253

-ஊடகப்பிரிவு-
அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி இடம்பெறவிருக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் ஏனைய பகுதிகளில் உள்ள 06 மாவட்டங்களில் தனித்தும், 07 மாவட்டங்களில் ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்தும் போட்டியிடுகின்றது.

வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, மட்டக்களப்பு, அநுராதபுரம், புத்தளம், கொழும்பு ஆகிய மாவட்டங்களில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து யானை சின்னத்தில் களமிறங்குகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கோரளைப்பற்று மேற்கு – ஓட்டமாவடி பிரதேச சபை, கோரளைப்பற்று – வாழைச்சேனை பிரதேச சபை, ஏறாவூர் பற்று – செங்கலடி பிரதேச சபை ஆகியவற்றில் ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து யானை சின்னத்திலும், ஏறாவூர் நகரசபையில் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் வண்ணாத்துப்பூச்சி சின்னத்திலும், மட்டக்களப்பு மாநகர சபை மற்றும் காத்தான்குடி நகரசபையில் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் கீழ், மயில் சின்னத்தில் போட்டியிடுகின்றது.
மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகரசபை, மன்னார் பிரதேச சபை

, முசலி பிரதேச சபை, நானாட்டான் பிரதேச சபை, மாந்தை மேற்கு பிரதேச சபை ஆகியவற்றிலும், வவுனியா மாவட்டத்தின் வவுனியா நகரசபை, வெங்கலச்செட்டிக்குளம் பிரதேச சபை, வவுனியா தமிழ் பிரதேச சபை, வவுனியா தெற்கு சிங்களப் பிரதேச சபை, வவுனியா வடக்கு பிரதேச சபை ஆகியவற்றிலும், முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச சபை (Maritime Pattu), மாந்தை கிழக்கு பிரதேச சபை, துணுக்காய் பிரதேச சபை, புதுக்குடியிருப்பு பிரதேச சபை ஆகியவற்றில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து யானை சின்னத்தில் களமிறங்குகின்றது.

அநுராதபுரம் மாவட்டத்திலுள்ள கெக்கிராவ பிரதேச சபை, கல்னேவ பிரதேச சபை, கஹட்டகஸ்கிகிலிய பிரதேச சபை, இப்பலோகம பிரதேச சபை, கெப்பத்திகொல்லாவ பிரதேச சபை ஆகியவற்றிலும், மக்கள் காங்கிரஸ், ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து, யானை சின்னத்தில் போட்டியிடுகின்றது.

புத்தளம் மாவட்டத்தின் புத்தளம் நகரசபை, புத்தளம் பிரதேச சபை, கற்பிட்டி பிரதேச சபை, வனாத்தவில்லு பிரதேச சபை ஆகியவற்றிலும், கொழும்பு மாவட்டத்தில் கொழும்பு மாநகர சபையிலும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து யானை சின்னத்தில் போட்டியிடுகின்றது.

அத்துடன், அம்பாறை, திருகோணமலை, குருநாகல், கண்டி, கம்பஹா, களுத்துறை, ஆகிய மாவட்டங்களில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தனது மயில் சின்னத்தில் தனித்துக் களமிறங்குகின்றது.

அம்பாறை மாவட்டத்தில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹசன் அலி தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் கீழ், அக்கரைப்பற்று பிரதேச சபை, கல்முனை மாநகர சபை, சம்மாந்துறை பிரதேச சபை, நாவிதன்வெளி பிரதேச சபை, பொத்துவில் பிரதேச சபை, நிந்தவூர் பிரதேச சபை ஆகியவற்றில் மயில் சின்னத்தில் போட்டியிடுகின்றது.

திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியா நகரசபை, கிண்ணியா பிரதேச சபை, மூதூர் பிரதேச சபை, குச்சவெளி பிரதேச சபை, தம்பலகாமம் பிரதேச சபை, சேருவில பிரதேச சபை, திருமலை நகரசபை, கந்தளாய் பிரதேச சபை, மொரவெவ பிரதேச சபை ஆகியவற்றில் மக்கள் காங்கிரஸ் தனது மயில் சின்னத்தில் போட்டியிடுகின்றது.

குருநாகல் மாவட்டத்தின் குருநாகல் மாநகர சபை, குளியாப்பிட்டிய பிரதேச சபை, ரிதீகம பிரதேச சபை, நாரம்மல பிரதேச சபை, பொல்கஹவெல பிரதேச சபை ஆகிய ஐந்து உள்ளூராட்சி சபைகளில் மக்கள் காங்கிரஸ் தனது மயில் சின்னத்தில் தனித்துக் களமிறங்குகின்றது.

கண்டி மாவட்டத்தின் உள்ளூராட்சி சபைகளான ஹாரிஸ்பத்துவ பிரதேச சபை, அக்குரணை பிரதேச சபை, பாத்ததும்பர பிரதேச சபை, உடபலாத்த பிரதேச சபை, உடுநுவர பிரதேச சபை, யட்டிநுவர பிரதேச சபை, பாத்தஹேவாஹெட்ட பிரதேச சபை கம்பளை நகரசபை ஆகியவற்றில் மக்கள் காங்கிரஸ் மயில் சின்னத்தில் தனித்துப் போட்டியிடுகின்றது.

களுத்துறை மாவட்டத்தின் பேருவளை பிரதேச சபை, களுத்தறை நகரசபை ஆகியவற்றிலும், கம்பஹா மாவட்டத்தில் நீர்கொழும்பு மாநகர சபையிலும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனது மயில் சின்னத்தில் தனித்துக் களமிறங்குகின்றது.

LEAVE A REPLY