தென்கிழக்கு ஈரானில் நிலநடுக்கம் – ரிக்டரில் 5.2 ஆக பதிவு

0
122

ஈரான் நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள கெர்மான் மாகாணத்தில் நேற்றிரவு நில அதிர்வு உணரப்பட்டது. ரிக்டர் அளவில் 5.2 என்ற அளவில் இந்த நில நடுக்கம் பதிவாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. உள்ளூர் நேரப்படி மாலை 5:04 மணிக்கு ரவார் நகரில் இருந்து வடமேற்கு திசையில் சுமார் 51 கி.மீ தொலைவிலும், 10 கி.மீ. ஆழத்திலும் இந்த நில அதிர்வு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலநடுக்கத்தினால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் கூடினர். நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து உடனடியாக எந்த தகவலும் வெளியாகவில்லை.

நேற்றிரவு ஈரான் நாட்டின் தலைநகரான டெஹ்ரானில் ரிக்டரில் 5.2 புள்ளிகளாக பதிவான நிலநடுக்கத்தினால் 2 பேர் உயிரிழந்தனர். கடந்த நவம்பர் மாதம் ஈரான் – ஈராக் எல்லைப்பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால் நூற்றுக்கணக்காணோர் உயிரிழந்ததோடு, ஆயிரக்கணக்காணோர் வீடுகளை இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY