பொத்துவில் மண்மலைப் பிரதேசத்தில் ஆணொருவரின் சடலம் உருக்குலைந்த நிலையில் மீட்பு

0
151

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

பொத்துவில் மண்மலைப் பிரதேசத்தை அண்டிய ஜலால்தீன் சதுக்க கடற்கரைப் பகுதியில் அழுகிய நிலையில் ஆணொருவரின் சடலமொன்று செவ்வாய்க்கிழமை மாலை மீட்கப்பட்டதாக பொத்துவில் பொலிஸார் தெரிவித்தனர்.

கரையோர ஊசியிலை மரங்கள் அடர்ந்த பகுதியிலிருந்து மனிதப் பிண வாடை வீசிவருவதாக பிரதேச மக்களும் மீனவர்களும் பொலிஸாருக்குத் தகவல் தந்திருந்தனர்.

அதனடிப்படையிலேயே குறித்த பிரதேசத்தில் தேடுதலை மேற்கொண்ட பொலிஸார் பொத்துவில் பி-03 எனும் கிராம சேவகர் பிரிவிலடங்கும் கடற்கரை மரங்களடர்ந்த பகுதியிலிருந்து உரக்குலைந்த ஆணொருவரின் சடலத்தை மீட்டதாகத் தெரிவித்தனர்.

ஒரு சில நாட்களுக்கு முன்னர் இந்த ஆண் இற்ந்திருக்கலாம் எனத் தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இறந்தவர் இதுவரை யாரென அடையாளம் காணப்படவில்லை எனவும் தெரிவித்த பொலிஸார் விவரம் தெரிந்தவர்களை தகவல்களை வழங்குமாறு கேட்டுள்ளனர்.

LEAVE A REPLY