இது ஒரு தேர்தல் காலம்

0
413

(Mohamed Nizous)

வீடு வரை வருவார்
வீதிகளில் சிரிப்பார்
போட வேண்டும் ஓட்டு
புள்ள நீயும் என்பார்
புள்ள நீயும் என்பார்

தேர்தல் வரை கூட்டம்
தெரிவு பெற நாட்டம்
கூடுகின்ற கூட்டம்
கொஞ்ச வாக்கும் தருமோ?

கொட்டிலுக்கும் அண்ண
குனிந்து கொண்டு போவார்.
தொட்டுக் குழந்தை தூக்கி
கட்டுப் பணம் தருவார்.
கட்டுப் பணம் தருவார்.

வென்றவரைக் கேட்டால்
வேலை பிஸி என்பார்.
தோற்றவனைக் கேட்டால்
தொலைந்து போ என்பார்
தொலைந்து போ என்பார்

வட்டாரத்து தேர்தல்
வட்டமிடும் ஆட்கள்
முட்டி மோதிக் கொள்வார்
வெட்டிப் போட்டும் வெல்வார்
வெட்டிப் போட்டும் வெல்வார்

LEAVE A REPLY