மு.கா. காத்தான்குடியில் முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பு தராசு சின்னத்தில் போட்டி

0
553

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் காத்தான்குடி நகர சபை தேர்தலில் முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பின் சின்னமான தராசு சின்னத்தில் போட்டியிடுகின்றது.

இதற்கான வேட்புமனுப்பத்திரம் முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பினால் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இன்று (21) தாக்கல் செய்யப்பட்டது.

காத்தான்குடி நகர சபை தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து யானைச்சின்னத்தில் போட்டியிடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில்,

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு மிடையில் ஏற்பட்ட வேட்பாளர் போடும் முறன்பாட்டினால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இறுதி நேரத்தில் முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட தீர்மானித்தது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது மரச்சின்னத்தில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தினை செலுத்த தவறியதாலேயே முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட வேண்டிய நிலை முஸ்லிம் காங்கிரசுக்கு ஏற்பட்டுள்ளது.

LEAVE A REPLY