காத்தான்குடி நகர சபை தேர்தல் விவகாரம்; ஓற்றுமைப்படுத்த முடியாமலே போய் விட்டது: SRD

0
496

(விஷேட நிருபர்)

ஆய்வுக்கும் அபிவிருத்திக்குமான சமூகம் அதன் சகோதர அமைப்பான அபிவிருத்திக்கும் சுபீட்சத்துக்குமான சமூக இயக்கம் என்பன காத்தான்குடியின் கல்வி, சுகாதாரம், சூழல் போன்ற துறைகளில் அபிவிருத்தியை மையப்படுத்தி இயங்கி வருகின்றன. காத்தான்குடியை சார்ந்ததாக தமது தொழில்களையும் கொண்ட, மேலும் ஓரளவு சமூக கரிசனம் கொண்ட பலர்களை உள்ளடக்கியதாக பல வருடங்களாக இயங்கி வருகிறது.

காத்தான்குடியில் கல்வி அபிவிருத்தி மற்றும் காத்தான்குடி ஆதார வைத்தியசாலை, இன்னும் சம்மேளனம் இதன் உறுப்பினர்களின் வகிபாகம் மிகப்பெரியது.

இதில் இருக்கும் அதிகமான உறுப்பினர்கள் அரச பதவி நிலை உத்தியோகத்தர்கள், நேரடி அரசியல் உரிமைமறுக்கப்படடவர்கள்.

உள்ளுர் ஆட்சி தேர்தல் தவித்து எதிரகாலத்தில் நடைபெறப்போகும் புதிய கலப்புத் தேர்தல் முறைமை அல்லது தற்போதய முறைமை மூலம் காத்தான் குடியை பொறுத்த வரையில் தற்போதய நிலையில் மிக பாதகமான கூறுகளை கொண்டது.

இவ்வாறாக மூன்று குழுக்களுக்கிடையில் வாக்குகள் பிரிக்கப்படும் போது எமது பிரதிநித்துவம் பறிபோக கூடிய ஆபத்தினை நாம் பலராலும் அறிவுறுத்தப்பட்டு இருந்தோம்.

இந்த பின்னனியில் இந்த தேர்தலில் மூன்று குழுக்களையும் ஒன்றிணைக்க முடியாத போது இருவரையாவது இணைத்து இத் தேர்தலை எதிர் கொள்ள முடியுமா என்று சில முயற்சிகளை மேற்கொண்டு இருந்தோம்.

முதலாவதாக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி மற்றும் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா அணியின் இணைப்பு விடயம் முறிந்த போதும், நல்லாட்சிக்கான தேசிய முன்னணி மற்றும் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் ஆகியோருக்கிடையிலான இணைப்பு இறுதிவரை சாத்தியமானதாக தோன்றிய போதும் முடியாமலேயே போய்விட்டது.

இருந்தாலும் இந்த முயற்சி பல பாடங்களை எமக்கு கற்று தந்திருக்கிறது. இதை மையமாக கொண்டு எதிர்வரும் தேர்தல்களில் இன்னும் வினைத்திறனோடு எமது ஊரின் வாக்கு சிதறல்களை நேர்த்தி செய்ய முடியும் என்று நம்புகிறோம்.

இதற்கும் மேலதிகமாக எம்முடன் பேச வந்தவர்கள் எல்லோரும் எம்மை அவர்களுடன் இனைந்து தேர்தலில் பயணிக்குமாறும் அவ்வாறான சந்தர்ப்பத்தில் தவிசாளர் கதிரையை தருவதாக அழைப்புகளை விடுத்திருந்த போதிலும் எமது நோக்கத்தில் மிக போதுமான கரிசனையோடு இருந்து இருக்கிறோம் என்பது இப்போதைக்கு எமக்கான ஆறுதல் ஆகும்.

அத்துடன் தேர்தல் முடிவுகளின் பின்னரும் எதிரும் புதிருமாக இருந்து எமது நகரசபையின் ஆட்சியை தடைப்படுத்தாது கட்சிகள் யாவும் இணைந்து நகரசபை ஊடாக எமதூருக்கு சிறந்த சேவையை செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றோம்.

தேர்தல் காலங்களிலும் தேர்தல் மேடைகளிலும் சகோதர உணர்வுடனும் நாகரிகமாகவும் நடந்து கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.

தலைவர்/செயலாளர்,
அபிவிருத்திக்கும் சுபீட்சத்துக்குமான சமூக இயக்கம்,
காத்தான்குடி.

LEAVE A REPLY