அமீர் அலியின் வலது கை அஸ்மி ஓட்டமாவடி இரண்டாம் வட்டாரத்திற்காக வேட்புமனுவினை தாக்கள் செய்தார்

0
307

04(ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்)

கல்குடா- கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபைக்கான வேட்பு மனு இன்று (21) பிரதி அமைச்சர் அமீர் அலியின் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் தாக்கள் செய்யப்பட்டது.

இதில் பிரதி அமைச்சர் அமீர் அலியின் வலது கை என வர்ணிக்கப்படுபவரும், அவருடைய தீவிர அரசியல் செயற்பாட்டாளரும், முன்னாள் ஓட்டமாவடி பிரதேச சபையின் உறுப்பினருமான ஐ.ரி.அஸ்மி பெரும் எண்னிக்கையான ஆதரவாளர்களுடன் ஓட்டமாவடி இரண்டாம் வட்டாரத்திற்கான வேட்பாளருக்கான மனுவினை தாக்கள் செய்ய வந்திருந்தமை வேட்புமனு தாக்கள் செய்ய வந்திருந்த சகல கட்சிகளினுடைய ஆதரவாளர்கள் மற்றும் வேட்பாளர்களுடைய கவனத்தினை ஈர்த்த விடயமாக பார்க்கப்பட்டது.

ஓட்டமாவடி பிரதேச சபையானது தொடர்ந் தேர்ச்சியாக இரண்டு தடைவைகள் பிரதி அமைச்சர் அமீர் அலியின் கட்டுப்பட்டிற்குள் இருந்து வரும் அதே நேரத்தி வரலாற்றில் இது வரைக்கும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசினால் ஓட்டமாவடி பிரதேச சபையினை கைப்பற்ற முடியாத பாரிய சவாலாக இருப்பது கல்குடா பிரதேச அரசியலில் முக்கிய விடயமாக கருதப்படுகின்றது.

அந்த வகையிலே புதிய வட்டார தேர்தல் முறையின் கீழ் யானை சின்னத்தில் ஓட்டமாவடி பிரதேச சபைக்காக போட்டியிடுக்கின்ற அகில இலங்கை மக்கள் காங்கிரசானது முக்கியமான ஏழு வட்டாரங்களுக்கு தனது வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. அதன் அடிப்படையில் ஓட்டமாவடி இரண்டாம் வட்டாரத்திற்காக போட்டியிடுகின்ற ஐ.ரி.அஸ்மி ஏனைய வாட்டாரங்களில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களை விடவும் அதி கூடிய விருப்பு வாக்குகளுடன் வெற்றிபெறக் கூடியவர் என்ற கருத்து பரவலாக ஓட்டமாவடி மற்றும் கல்குடா பிரதேசத்தில் பேசும் பொருளாக இருந்து வருகின்றது.

அத்தோடு உரிய நேரத்தில் முஸ்லிம் காங்கிரஸ் ஓட்டமாவடி பிரதேச சபைக்கான கட்டுப்பணத்தினை செலுத்த தவரியதினால் மரச்சின்னத்தில் கேட்கின்ற வாய்ப்பினை இழந்து சுயேற்சையாக கேட்கின்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளமையும் ஓட்டமாவடி பிரதேச சபையினை மீண்டும் கைப்பற்றும் விடயத்தில் பிரதி அமைச்சர் அமீர் அலிக்கு கிடைத்துள்ள மேலதீக அதிஸ்ட்டம் (Lucky) எல்லோராலும் பார்க்கப்படுகின்றது.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் ஐ.ரி.அஸ்மி தனது ஆதரவாளர்களுடன் வேட்புமனு தாக்கள் செய்த நிகழ்வின் காணொளி இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

01 02 03

LEAVE A REPLY