மட்டக்களப்பு மாவட்டத்தில் 81 வேட்புமனுக்கள் தாக்கல்; இரண்டு வேட்புமனுக்கள் நிராகரிப்பு

0
109

(விஷேட நிருபர்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் 81 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதில் இரண்டு அரசியல் கட்சிகளின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டு 79 வேட்பமனுப்பத்திரங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலருமான மாணிக்கம் உதயகுமார் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாநகர சபைக்காக வேட்புமனு தாக்கல் செய்த அகில தமிழ் காங்கிரசின் வேட்புமனுவும் கோறளைப் பற்று வடக்கு பிரதேச சபைக்காக வேட்புமனுத் தாக்கல் செய்த தேசிய மக்கள் கட்சியின் வேட்மனுப்பத்திரமும் நிராகரிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்தார்.

இன்று (21) வியாழக்கிழமை நண்பகள் 12 மணியுடன் நிறைவடைந்த வேட்புமனுக்களை கையேற்கும் நடவடிக்கையை தொடர்ந்து இது தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மாவட்ட அரசாங்க அதிகர் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மட்டக்களப்பு மாநகர சபைக்காக 12 அரசியல் கட்சிகளும் 5 சுயேட்சைக்குழுக்களும் வேட்புமனுப்பத்திரம் தாக்கள் செய்திருந்தன. இதில் அகில இலங்கை தமிழ் காங்கிரசின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.

காத்தான்குடி நகர சபைக்காக 8அரசியல் கட்சிகளும் 3 சுயேட்சைக்குழுக்களுமாக 11 வேட்புமனு பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டு அது ஏற்றுக் கொள்ளப்பட்டன.

கோறளைப் பற்று வடக்கு பிரதேச சபைக்காக 9 அரசியல் கட்சிகளும் 2 சுயேட்சைக்குழுக்களும் வேட்பு மனு தாக்கல் செய்ததில் தேசிய மக்கள் கட்சியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.

கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபைக்காக 9 அரசியல் கட்சிகளும் ஒரு சுயேட்சைக்குழுவும், மண்முனை மேற்கு பிரதேச சபைக்காக 7 அரசியல் கட்சிகளும் 2 சுயேட்சைக்குழுக்களும், பேரதீவுப்பற்று பிரதேச சபைக்காக 7 அரசியல் கட்சிகளும் 2 சுயேட்சைக்குழுவும், மண்முனை தெண் எருவில் பற்று பிரதேச சபைக்காக 5 அரசியல் கட்சிகளும் ஒரு சயேட்சைக்குழுவும், மண்முனை தெண்மேற்கு பிரதேச சபைக்காக 7 அரசியல் கட்சிகளும் ஒரு சயேட்சைக்குழுவும் செய்த வேட்புமனுப் பத்திரங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

சிரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, இலங்கை தமிழரசுக்கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், மக்கள் விடுதலை முன்னணி, சிரீலங்கா பொதுஜன பெரமுன, தமிழர் சமூக ஜனநாய கட்சி, முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பு, மற்றும் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு ஆகிய அரசியல் கட்சிகள் இங்கு போட்டியிடுகின்றன.

LEAVE A REPLY