காத்தான்குடியில் வீடு புகுந்து பெண்ணொருவர் மீது கத்திகுத்து; படு காயங்களுடன் வைத்தியாசலையில் அனுமதி

0
790

(விஷேட நிருபர்)

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடி அன்வர் பகுதியைச் சேர்ந்த யுவதியொருவர் கத்திக்குத்துக்கு இலக்கான நிலையில் படு காயத்துடன் காத்தான்குடிஆதார வைத்தியசலையில் அனுமிக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் இன்று (21) அதிகாலை 5.00 மணியளவில் இடம் பெற்றுள்ளது.

இச் சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது புதிய காத்தான்குடி அன்வர் பள்ளிவாயல் வீதியிலுள்ள வீட்டுக்குள் முக மூடி அணிந்த இனம் தெரியா மூன்று பேர் புகுந்து அங்கு தூங்கிக் கொண்டிருந்த யுவதியின் மீது கத்தியினால் குத்தியுள்ளனர்.

இதனால் படுகாயமடைந்த குறித்த யுவதி காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கத்திக்குத்துக்கு இலக்கான குறித்த யுவதியின் உடம்பின் பல இடங்களிலும் காயங்கள் ஏற்பட்டுள்ளன.

இது தொடர்பான விசாரணையை காத்தான்குடி பொலிசார் மேற் கொண்டு வருவதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த யுவதியின் கனவர் அதிகாலை வேலைக்கு சென்ற பின்னரே இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது.

இந்த யுவதியின் வீட்டில் கடந்த 23.09.2017 அன்று இனம் தெரியாதோரினால் 3 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY