முதலாம் தர மாணவர்களுக்கு ஆசிரியர் இல்லை: ஆளுனர் ரோஹித போகொல்லாகமவிடம் கோரிக்கை

0
186

(அப்துல்சலாம் யாசீம்)

திருகோணமலை ரொட்டவெவ முஸ்லிம் மஹா வித்தியாலயத்தில் முதலாம் தர மாணவர்களுக்கு கற்பிப்பதற்கு ஆசிரியொருவர் இல்லையெனவும் அம்மாணவர்களின் நலன் கருதி ஆசிரியொருவரை நியமித்து தருமாறும் முள்ளான் மொறவெவ பிரசே சபை உறுப்பினர் ஏ.எஸ்.எம்.பைசர் கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித போகொல்லாகமவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

2018ம் ஆண்டு 01ம் தர மாணவர்களுக்கு கற்பிப்பதற்கு ஆசிரியர் இல்லையென அப்பாடசாலையின் அபிவிருத்தி குழு கூட்டத்தின் போது பெற்றோர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. அதனையடுத்து புதிதாக சேர்த்துக்கொள்ளப்படவுள்ள மாணவர்களின் பெற்றோர்கள் தங்களுக்கு பணவசதி இல்லாமையினால் தான் கிராமப்புர பாடசாலைகளில் பிள்ளைகளை சேர்த்துக்கொள்வதாகவும் பணவசதி படைத்தவர்கள் நகர்ப்புற பகுதிகளில் தமது பிள்ளைகளின் கல்விளை தொடருவதாகவும் பெற்றோர்கள் தமது கவலைகளையும் ஆதங்கங்களையும் தெரிவிப்பதாகவும் அவரது கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் திருகோணமலை வடக்கு கல்வி வலயத்தில் இருக்கின்ற ஒரேயொரு முஸ்லிம் மஹா வித்தியாலயம் ரொட்டவெவ முஸ்லிம் வித்தியாலயமாகும்!. அப்பாடசாலையில் பல வளப்பற்றாக்குறை காணப்படுவதாகவும் அதிலும் மிக முக்கியமாக ஆசிரியர் பற்றாக்குறை உடனடியாக நிவர்த்திக்கப்பட வேண்டும் எனவும் ஏ.எஸ்.எம்.பைசர் கிழக்கு மாகாண ஆளுனருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை கிழக்கு மாகாண கல்வி அபிவிருத்தியில் கிழக்கு ஆளுனர் ரோஹித போகொல்லாகம மிக கரிசனையுடன் செயற்பட்டு வருவதையிட்டு தான் மகிழ்ச்சியடைவதாக தெரிவித்த மொறவெவ பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் ஏ.எஸ்.எம்.பைசர் ரொட்டவெவ முஸ்லிம் வித்தியாலய மாணவர்களின் நலன் கருதியும் கிராம மக்களின் நலன் கருதியும் உடனடியாக முதலாம் தரத்திற்கு நிரந்தர ஆசிரியரொருவரை நியமித்து தருமாறும் அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY