மட்டக்களப்பு மாநகர சபை தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியில் முஸ்லிம் பெண் போட்டி

0
365

(விஷேட நிருபர்)

மட்டக்களப்பு மாநகர சபை தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் முஸ்லிம் பெண்ணொருவர் போட்டியிடுகின்றார்.

மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாயைச் சேர்ந்த மீராசாகிப் ஆயிஷா உம்மா என்பவரே ஐக்கிய தேசியக் கட்சியில் மட்டக்களப்பு மாநகர சபை பிரிவிலுள்ள 16ம் வட்டாரத்தினை பிரதி நிதித்துவப்படுத்தி போட்டியிடுகின்றார்.

இவருக்கான வேட்பு மனுப்பத்திரம் ஐக்கிய தேசியக் கட்சியினால் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.

பெண்களின் வாழ்வாதாரம் மற்றும் கனவனை இழந்த பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் வாழ்வதாரம் பின் தங்கியுள்ள தனது கிராமத்தின் வீதி அபிவிருத்தி போன்றவைகளை இலக்காக கொண்டு இத் தேர்தலில் போட்டியிடுவதுடன் பெண்களுக்கான குரலாக தான் செயற்படுவேன் என ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மீராசாகிப் ஆயிஷா உம்மா தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியை பலப்படுத்த அனைவரும் எனது வட்டாரத்திலும் மட்டக்களப்பு மாநகர சபை பிரிவிலும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY