தேயிலைக்கு விதிக்கப்பட்டுள்ள தற்காலிகத் தடை விரைவில் நீக்கப்படும்

0
100

ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் நம்பிக்கை

இலங்கையின் தேயிலையை இறக்குமதி செய்வதற்கு ரஷ்யா விடுத்துள்ள தற்காலிகத் தடையை விரைவில் நீக்கிக் கொள்ள முடியும் என்று ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் சமன் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இருந்து இறக்குமதியான தேயிலைத் தொகை ஒன்றில் வண்டு இனம் ஒன்று கண்டறியப்பட்டதால் இலங்கையில் இருந்து தேயிலை இறக்குமதி செய்வதை தடை செய்வதாக ரஷ்யா அறிவித்திருந்தது.
இது தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன கவனம் செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

(News.lk)

LEAVE A REPLY