கிண்ணியா நகர சபையும், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகமும் இணைந்து நடாத்திய சிரமதானம்

0
279

(ஹஸ்பர் ஏ ஹலீம்)

கிண்ணியா நகர சபையும்,கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகமும்
நேற்று (.19) சமூகம் சார்ந்த உறுப்பிர்களுடன் கிண்ணியா நகர சபையும், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக ஊழியர்கள் இணைந்து காலை 8.00 மணி தொடக்கம் பி.ப 2.00 மணி வரை கிண்ணியா பாலத்திலிருந்து உப்பாறு பாலம் வரை மாபெரும் சிரமதானப் பணியினை மேற்கொண்டிருந்தனர்.இத் திட்டத்தின் பிரதான நோக்கம் சூழலை சுத்தப்படுத்தல் டெங்கு நோயிலிருந்து மக்களைப் பாதுகாத்தல் எனும் நோக்கில் இது மேற்கொள்ளப்பட்டது

.கிண்ணியா நகர சபையின் விசேட ஆணையாளரும் செயலாளரும் என்.எம்.நௌபீஸ் மற்றும் கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ஏ.எம்.எம்.அஜீத் இருவருக்கிடையிலான அண்மைய சந்திப்போது இச் சிரமதான நிகழ்வு இடம்பெற்றதாகவும் செயலாளர் தெரிவித்தார்.

மக்களுக்கான சேவைகளைப் பெறுவது இலகுவாக காணப்படுவதுடன் அரச சொத்துக்களும் பாதுகாக்கப்படவேண்டும் சூழலை சுத்தமாக வைத்திருப்பதன் ஊடாக டெங்கு நுளம்புகள் பெருகுவதை கட்டுப்படுத்த முடியும் என பல சூழல் சுத்தமடைதல் சூழல் மாசடைதல் தொடர்பில் பல கருத்துக்களை ஊடகத்துக்கும் தெளிவுபடுத்தியபோதே இதன்போது மேலும் செயலாளர் தெரிவித்தார்.

FB_IMG_1513708759514

FB_IMG_1513708762593

LEAVE A REPLY