ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசில் இருந்து வெளியேறினாரா அட்டாளைச்சேனை முனாஸ்

0
185

(அமு.அஸ்ஜாத்)

கடைசி நிமிடம் வரை சீட் கிடைக்காவிட்டால் ஏனைய கட்சிகளில் கையொப்பமிட இருந்தவர்கள் பல இடங்களிலும் இருந்து கொண்டிருந்த நிலையில் ஒழுக்கமுள்ள இளைஞர் பட்டாளத்தையும் மக்களின் அபிமானத்தையும் பெற்று கட்டாயம் தேர்தல் கேட்கத்தான் வேண்டும் என்ற ஆதரவாளர்களின் கட்டாய கோரிக்கையும் இருந்த நிலையில் சிலர் செய்த சதிக்கு இடம்கொடுக்காது கட்சி தலைமை கேட்டுக்கொண்டதற்கிணங்க விட்டுக்கொடுத்தவந்தான் இந்த முனாஸ்.

ஊரில் இன்று வெற்றிவாகை சூடும் நிலையில் இருக்கும் கட்சிகளின் தலைமைகள், முக்கிய புள்ளிகள் பல தடவைகள் அழைப்பை எடுத்து அன்பாக அழைத்தும், ஏன் நண்பர்கள் மற்றும் இளைஞர்கள் கோரிக்கை விடுத்தும் இல்லை பதவியொன்றும் பெரிதல்ல என்று எல்லாரின் அழைப்பையும் மரியாதையுடன் திருப்பிவிட்டவந்தான் இந்த முனாஸ்.

உடனடியாக எனது அமைச்சில் நியமனம் ஒன்றினை நாளைக்கே போட்டு விடுவிக்கிறேன் என்று தலைமை கூறியும் இல்லை பதவிக்காக நான் அல்ல பாதிக்கப்படும் மக்களின் குரலாக, ஒடுக்கப்படும் சமூகத்தின் குரலாக, மக்களுக்காக குரல் கொடுக்கும் ஒருவனாக நானிருக்க விரும்புகிறேன் என்று விட்டுக்கொடுத்தவந்தான் இந்த முனாஸ்.

முனாஸை வெறுப்போர் முனாசின் எதிரியாக ஒரு நாளும் இருக்க முடியாது. எதிர் அரசியல் செய்வோரின் கைக்கூலியாக இருக்க வேண்டும் அல்லது அவர்களின் சோற்றை தின்பராக இருக்க வேண்டும் அதுதான் உண்ட வீட்டுக்கு செய்யும் நன்றிக்கடன் என்று முனாஸை எதிர்க்கின்றனர் மாறாக யாரையும் நொந்து கொள்ளாதவந்தான் இந்த முனாஸ்.

ஊடகத் தொழில் செய்யும் சிலரின் அகங்காரத்தை உடைத்து எல்லாருக்கும் ஊடகம் தெரியவேண்டும். ஊடகத்தின் மூலம் மக்கள் நன்மையடைவேண்டும் என்று இளைஞர்களுக்காக ஸ்தாபித்த இம்போட்மிரர் என்னும் ஊடகம் இன்று உலகமெல்லாம் பரந்து பிரிந்து பல இளைஞர்களும் கற்றுக்கொள்ள இடம்கொடுத்தவந்தான் இந்த முனாஸ்.

வானொலி அறிவிப்பாளராக வேண்டும் என்ற இன்றைய இளைஞர்களின் தவிர்க்க முடியாத ஆசையை சொந்த ஊரில் சமூக வானொலியாகவும் இணைய வானொலியாக ஆரம்பித்து பல அறிவிப்பாளர்களை இலவசமாக வளர்த்து விட்டவந்தான் இந்த முனாஸ்.

இன்று இம்போட்மிரர் இணையத்தில் இலங்கையில் 67 ஊடக வியலாளர்களும் உலக வட்டத்தில் 16 ஊடகவியலாளர்களையும் உள்ளடக்கி உடனுக்குடன் மாத்திரமன்றி பக்கசார்பில்லாமலும் தன் தலைவனைப் பற்றி எதிராக வந்தாலும் செய்தித் தளத்தில் பாக்கசார்பு காட்ட வேண்டாம் என்று தன் குழுவிடம் கட்டாயமாக கூறிவைத்த வந்தான் இந்த முனாஸ்.

இருக்கும் இடத்தில் நம்பிக்கையாய் இருந்து தன் பணியை ஒழுங்காகச் செய்து பணிக்கும் பணிக்குரியோருக்கும் வெற்றியைத் தேடிக் கொடுத்து விட்டு வெளியேறும் ஒருவந்தான் இந்த முனாஸ்.

சொந்தமாய் தொழில் செய்து தாரம் ஒன்றும் கைப்பிடித்து, சீதனத்தை சீரோவாக்கி தன்னுடன் வாழ வந்த தாரத்துக்கு முனாஸ் தொழிலில் வீடுகட்டி சந்தோசமாய் வாழ்பவந்தான் இந்த முனாஸ்.

சில்லான் கூட்டத்தின் கொக்கரிப்புக்கும், சில்லறைக் காசிக்கும், சில நேர தேயிலைக்கும், எதிரியின் இரைச்சலுக்கும், ஊழையிடும் ஓநாய்களுக்கும் ஒருபோதும் அடிபணியாது, செவிசாய்க்காது நிமிர்ந்து செல்லும் ஒருவனாக வலம் வரும் இந்த முனாசுடன் அவரின் ஆதரவாளர்களாக நண்பர்களாக நாம் நன்றியுடன் என்றுமிருப்போம்.

LEAVE A REPLY