மட்டு மாநகர சபை முன்னாள் உறுப்பினர் றமழான் அகில இலங்கை மக்கள் காங்கிரசில் இணைந்தார்

0
206

(விசேட நிருபர்)

மட்டக்களப்பு மாநகர சபையின் சிரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் முன்னாள் உறுப்பினர் அன்சார் என அழைக்கப்படும் என்.கே.றமழான் அகில இலங்கை மக்கள் காங்கிரசில் இணைந்து கொண்டார்.

சிரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் மட்டு மாநகர சபை முன்னாள் உறுப்பினரான இவர் ஏற்கனவே நல்லாட்சிக்கான தேசிய முன்னணியில் இணையப் போவதாக கதைகள் வந்த போதிலும் இவர் தற்போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியிலேயே உத்தியோக பூர்வமாக இணைந்துள்ளார்.

மட்டக்களப்பு மாநகர சபை தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் சார்பில் மயில் சின்னத்தில் போட்டியிடுவதற்காக வேட்பாளர் பத்திரத்திலும் இன்று செவ்வாய்க்கிழமை இவர் கையொப்பமிட்டுள்ளார்.

சிரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் காத்தான்குடி மத்திய குழு செயலாளராகவும் இவர் செயற்பட்டதுடன் அக்கட்சியிலிருந்து விலகி தற்போது அமைச்சர் றிசாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரசில் இணைந்துள்ளார்.

LEAVE A REPLY