பொலித்தீன் பாவனை தொடர்பில் பொலிஸார் இணைந்து நட­வ­டிக்கை.!

0
193

அடுத்த ஆண்டு இடம்­பெ­ற­வுள்ள உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­தல்கள் தொடர்பில், பிர­சாரம் உள்­ளிட்ட பணி­க­ளுக்கு பொலித்தீன் பயன்­ப­டுத்­து­வது மற்றும் அத­னுடன் தொடர்­பு­டைய நட­வ­டிக்­கைகள் தொடர்பில் மத்­திய சுற்­றாடல் அதி­கார சபை­யுடன் இணைந்து நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குண­சே­கர தெரி­வித்தார்.

பொலித்தீன் பாவனை தொடர்பில் அதி விசேட வர்த்­த­மா­னி­க­ளான 2034/33 முதல் 2034/38 வரை­யி­லான வர்த்­த­மா­னிகள் ஊடாக தெளி­வான அறி­வு­றுத்­தல்கள் உள்­ளன. அதன் அடிப்­ப­டையில் இந்த உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­தலின் போது பொலித் தீன் பயன்­பாடு தொடர்பில் அந்த வர்த்­த­மானி அறி­வு­றுத்தல் மற்றும் தேசிய சுற்­றாடல் சட்டம் ஆகி­ய­வற்­றுக்கு அமை­வாக நாம் நடந்­து­கொள்வோம். தேசிய சுற்­றாடல் சட்­டத்தின் பிர­காரம் பொலித்தீன் தொடர்பில் நட­வ­டிக்கை எடுக்கும் அதி­காரம் மத்­திய சுற்­றாடல் அதி­கார சபைக்கே உள்­ளது.

இந் நிலையில் நாம் மத்­திய சுற்­றாடல் அதி­கார சபைக்கு தேவை­யான அனைத்து உத­வி­க­ளையும் செய்வோம். அவர்­க­ளுடன் இணைந்து செயற்­பட மத்­திய சுற்­றாடல் அதி­கார சபையில் பொலிஸ் காவ­லரண் ஒன்று அமைக்­கப்­பட்­டுள்ள நிலையில், அனைத்து பொலிஸ் நிலை­யங்­க­ளிலும் உள்ள சுற்றுச் சூழல் தொடர்­பி­லான பிரி­வுக்கும் அறி­வு­றுத்­தல்கள் வழங்­கப்­பட்­டுள்­ளன.

மத்­திய சுற்­றாடல் அதி­கார சபையுடன் இணைந்து நாம் இது தொடர்பில் நடவடிக்கைகளை முன்னெடுப்போம். என பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

LEAVE A REPLY