எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத்தேர்தல் இலக்கத்திற்கு வாக்களிக்கின்ற தேர்தல் அல்ல ஒரு வட்டாரத்தில் போட்டியிடுகின்ற ஒருவரை தெரிவு செய்வதற்காக வாக்களிக்கின்ற தேர்தலாகும்

0
508

வாழைச்சேனை நிருபர்
எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத்தேர்தல் இலக்கத்திற்கு வாக்களிக்கின்ற தேர்தல் அல்ல ஒரு வட்டாரத்தில் போட்டியிடுகின்ற ஒருவரை தெரிவு செய்வதற்காக அவர்சார்ந்த சின்னத்திற்கு மாத்திரம் வாக்களிக்கின்ற தேர்தலாகும் என்று கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

சரிப் அலி ஆசிரியர் அமைப்பின் ஏற்பாட்டில் றோஸ் முன்பள்ளியின் 23வது மாணவர் தரமுயர்த்தல் விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) செம்மண்ஓடை அல் ஹம்றா வித்தியாலயத்தில்இடம் பெற்ற போது அதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தர்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்.

அந்த வகையிலே கோறளைப்பற்று பிரதேச சபைக்கு உங்களது வட்டாரத்திலே வாக்களிக்கின்றவர்கள் யானைச்சின்னத்திற்கு புள்ளடியிட்டு இந்த பிரதேசத்திலே ஒரு பிரதிநிதித்துவத்தைப் பெற்று எதிர்காலத்திலே கோறளைப்பற்று மத்தி பிரதேச சபை உருவாக்கப்பட வேண்டும் என்ற போராட்டத்திலே நீண்டகாலமாக என்னுடன் செயற்பட்டு வருகின்றவரைத்தான் வேட்பாளராக களமிறக்கியிருக்கிறோம் அவரை வெற்றிபெறச்செய்ய வேண்டும் என்று உங்களிடம கேட்டுக் கொள்கிறேன்.

கோறளைப்பற்று மத்தி பிரதேச சபை தொடர்பாக இங்கு இருக்கும் எத்தனை பேருக்குத் தெரியும் என்று எனக்குத்தெரியாது செம்மண்ஓடை, மாவடிச்சேனை, பிறைந்துரைச்சேனை, வாழைச்சேனை, ரிதிதென்ன,ஜெயந்தியாய, கேணிநகர் தியாவட்டுவான் போன்ற கிராமங்களை உள்ளடக்கியதாக ஒரு புதிய பிரதேச சபையை உருக்குவாதற்கு மிக நீண்டகாலமாக போராடிவருகின்றோம் அதனை வென்றெடுப்பதற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்சார்பாக ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களை வெற்றியடையச் செய்ய வேண்டிய பொறுப்பு இப்பகுதி மக்களுக்கு உண்டு.

இந் நிகழ்வில் மாணவர்களது கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றதோடு தரமுயர்த்தப்படும் மாணவர்களுக்கு அதிதிகளால் நினைவுச்சின்னமும் சான்றிதழும் வழங்கி வைக்கப்பட்டது.

அமைப்பின் தலைவர் ஐ.எல்.சம்மூன் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வல் அல் ஹம்றா வித்தியாலய அதிபர் எம்.எஸ்.சுபைதீன், சட்டத்தரணி எம்.எம்.எம்.ராசிக், ஓட்டமாவடி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட், கோறளைப்பற்று பிரதேச சபைக்காக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக ஐக்கிய தேசிய கட்சியின்; வேட்பாளர் எச்.எம்.எம்.ஹக்கீம், சரிப் அலி ஆசிரியர் அமைப்பின் பணிப்பாளர் வை.எல்.மன்சூர் மற்றும் பிரதேச முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

01 (1) 11 12 13 10 09 08 07 (1) 03 (1)

LEAVE A REPLY