புற்று நோயில் இருந்து பாதுகாப்பு பெருவோம் ஊடாக விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டங்கள்

0
226

வாழைச்சேனை நிருபர்

இலங்கையில அதிகரித்து வரும் புற்று நோயாளர்களின் அதிகரிப்பை குறைக்கும் வகையில் சுகாதார அமைச்சின் புற்று நோய் தடுப்பு பிரிவினால் நாடலாவிய ரீதியில் பல்வேரு நிகழ்ச்சித்திட்டங்கள் இடம் பெற்று வருகின்றது.

புற்று நோயில் இருந்து பாதுகாப்பு பெருவோம் எனும் தொனிப் பொருளில் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் மாவட்டத்தில் உள்ள பதிநான்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் ஊடாக விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது.

இதன் அடிப்படையில் ஓட்டாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் ஓட்டமாவடி முதலாம் வட்டார மக்களுக்கு ஏற்பாடு செய்த ‘புற்று நோயில் இருந்து பாதுகாப்பபு பெருவோம்’ எனும் தொனிப்பொருளிலான விழிப்பணர்வு கருத்தரங்கு (18.12.2017) ஓட்டமாவடி ஸ்மைல் சென்றர் மண்டபத்தில் இடம் பெற்றது.

இதன் போது ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரீக், பல் வைத்திய நிபுணர் ஏ.எல்.ஏ. ஹஸீனா ஆகியோர் வளவாளர்கலாக கலந்து கொண்டதுன் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் பயனாளிகளாக கலந்து கொண்டனர்.

01 02 03 04

LEAVE A REPLY