யானையும் மயிலும் ஓட்டமாவடியில் ஒன்றிணையுமா.? அதனை ஹக்கீம் ஏற்றுகொள்வாரா.?

0
303

ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்

ஓட்டமாவடில் முஸ்லிம் காங்கிரஸ் யானையில் வருவதா அல்லது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் யானயில் வருவதா.

கல்குடா – ஓட்டமாவடி பிரதேச சபைக்கான தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியும் அகில இலங்கை மக்கள் காங்கிரசும் ஒன்றிணைந்து தேர்தலில் குதிப்பதாக உடன்பாட்டுடனான கதையே பரவலாக பிரதேசத்தில் பேசப்பட்டு வந்தது.

அதன் அடிப்படையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 7வேட்பாளர்களை களத்தில் நிறுத்தவும் இரண்டு வேட்பாளர்களை ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் களமிறக்குவதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவே பரவலாக பேசப்பட்டு வந்தது.
ஆனால் இன்று (18) பிந்தி கிடைத்த தகவலின் படி ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான அப்துர் ரவூப் ஹக்கீம் முஸ்லிம் காங்கிரசும் ஐக்கிய தேசிய கட்சியும் இணைந்தே ஓட்டமாவடி பிரதேச சபைக்கான தேர்தலில் களமிறங்க வேண்டும் என்ற கோரிக்கையினை பிரதமரிடமும், ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகத்திலும் முன்வைத்துள்ளதாகவும், அதுதான் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் இறுதி முடிவு என்பதிலும் ஒற்றைக்காலில் நிற்பதாக தெரிவிக்கப்படுஇன்றது.

இதனால் அகில இலங்கை மக்கள் காங்கிரசானது மயில் சின்னத்திலோ அல்லது வண்ணாத்தி பூச்சியிலோ ஓட்டமாவடி பிரதேச சபைக்கான தேர்தலில் களமிறங்குவதற்கான வாய்ப்புக்களே அதிகமாக காணப்படுகின்றது. அதன் அடிப்படையில் ஏற்கனவே தாங்கள் இந்த இந்த வட்டராத்தில் ஐக்கிய தேசிய கட்சியுடன் கூட்டு சேர்ந்து யானை சின்னத்தில் களமிறங்குவதாக எண்ணிக்கொண்டிருந்த அகில இலங்கை மக்கள் காங்கிரசினுடைய வேட்பாளர்கள் குளப்பத்திற்கு உள்ளான நிலையில் காணப்படுவதாக ஓட்டமாவடி பிரதேசத்தில் உள்ள அங்காடி தெருக்களில் எல்லாம் குறித்த விடயம் பேசும் பொருளாக மாறியுள்ளது.

ஆகவே ஓட்டமாவடில் முஸ்லிம் காங்கிரஸ் யானையில் வருவதா அல்லது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் யானயில் வருவதா.? என்ற குளப்பம் நீடித்து கொண்டே செல்கின்றது

LEAVE A REPLY